எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீதிபதி லோயா மரணம் பற்றிய வழக்கு

 

சுதந்திரமான விசாரணையை கேட்பது நீதித்துறையின் மீது தாக்குதலாம்

 

சிறப்பு விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

 

டில்லி, ஏப். 20- நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட  மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தவிட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு, சொராபுதீன், அவருடைய மனைவி கவுசர் உள்ளிட்டோர் காவல்துறையின ரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப் பட்டனர். இவர்கள் அப்பாவிகள் என வும், இது காவல்துறையினர் நடத்திய போலி என்கவுன்டர் எனவும் குற்றச் சாட்டு எழுந்தது. இந்த போலி என்க வுன்டர் வழக்கில் அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா உட்பட 23 பேர் குற்றவாளிகளாக சேர்க் கப்பட்டனர். இந்த வழக்கு மும்பை சிபிஅய் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற் றப்பட்டது.  நீதிபதி பி.எச்.லோயா வழக்கை விசாரித்து வந்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 1இல் நாக்பூரில் நடந்த திருமண நிகழ்ச் சிக்குச் சென்ற நீதிபதி லோயா திடீரென மாரடைப்பால் இறந்தார். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத் தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கள் சந்திராசூட், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி விசா ரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப் பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங் கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:

நீதிபதி லோயா மரணம் இயற்கை யாக நடந்துள்ளது.  லோயாவுடன் பொறுப்பில் இருந்த நீதிபதிகள் அளித்த அறிக்கைகள் மீது எந்த சந்தேகமும் இல்லை. மனுதாரர்களின் முயற்சியா னது நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத் தும் செயல். சுதந்திரமான விசாரணை கேட்பது நீதித்துறை மீதான தாக்குதல். அரசியல் போட்டிகள் ஜனநாயக அரங் கில் தீர்க்கப்பட வேண்டும். இது நீதித் துறைக்கும் எதிரான ஒன்றாகும். இந்த வழக்கில் தற்போது இருக்கும் விசாரணை தொடந்து நடைபெறும். மேலும் நீதிபதி லோயா மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் இந்த தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்து விட்டன. வர்த்தக போட்டிகள் மார்க் கெட்டிலும், அரசியல் போட்டிகள் தேர்தலிலும் தீர்க்கப்பட வேண்டும். இது நீதிமன்றம். இது சட்டத்தை பாது காக்கும் இடம். எனவே இந்த மனுவை தாக்கல் செய்தவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தொடர வேண்டும். மேற்கொண்டு இந்த பிரச் சினையை நீட்டிக்க வேண்டாம் என் பதால் அந்த முடிவு கைவிடப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் மோசமான நாள் : காங்கிரசு கட்சி கருத்து

நீதிபதி லோயா வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து காங்கிரசு செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், இந்திய வரலாற்றில் மோசமான பதிவு கொண்ட நாள் இது. லோயா மரணத்தில் ஏற் பட்டுள்ள சூழ்நிலைகள் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் மீது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள் ளது. அதே சமயம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு அவதூறு அரசியல் மற்றும் அசிங்க அரசியல் செய்யும் பாஜ.வின் செயல் கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண் டும் என்றார்.

ராகுல் டுவீட்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான நிலையில், நேற்றிரவு ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்தியர்கள் மிகத்திறமையா னவர்கள். பாஜ.வில் இருக்கும் எம். பி.க்கள் உட்பட பெரும்பாலான இந் தியர்கள், அமித்ஷா பற்றி அறிந்து வைத்துள்ளார்கள். அவரைப் போன்றவர்களை உண்மை தன்னுடைய வழி யில் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner