எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப்.21  பணத் தட்டுப்பாடு விவகாரத்தில் வெறும் அறிக்கைகள் மட்டுமே உதவாது. ரூபாய் நோட்டு விநியோகத்தை மேம் படுத்தும் உறுதியான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சங்கத்தின் செயலர் வெங்கடாச்சலம் கூறியதாவது:

பணத் தட்டுப்பாடு விவகாரத்தில் வெறும் அறிக்கைகள் மட்டுமே உத வாது. ரூபாய் நோட்டு விநியோகத்தை மேம்படுத்தும் உறுதியான நடவடிக் கைகளை அரசு உடனடியாக மேற் கொள்ள வேண்டும். பணத் தட்டுப்பாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள மக் களின் கோபத்தை வங்கி ஊழியர்களே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் வங்கி ஊழி யர்கள் தரப்பில் தவறுகள் இல்லாத நிலையிலும், அவர்களை வாடிக்கையா ளர்கள் அவதூறாகப் பேசுகின்றனர். பணத் தட்டுப்பாடு விவகாரத்தில் விரைந்து தீர்வு காணப்படாவிட்டால், வங்கி ஊழியர்கள் சங்கம் மூலமாக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும். போதிய அளவு பணப் புழக்கம் இல்லாததற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியுமே காரணம். உண்மை யில் இந்தப் பிரச்சினை, கடந்த 2016 நவம்பரில் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ரூ.2000 நோட்டை அச்சடிக்க முடிவு செய்த போது தொடங்கியது.

கருப்புப் பணம் மற்றும் பணப் பதுக்கல் நடவடிக்கையை தடுப்பதற்காக ரூ.1000 நோட்டு திரும்பப் பெறப்பட்ட தென்றால், உண்மையில் தற்போதைய ரூ.2000 நோட்டு அந்த இரண்டையுமே எளிமையாக்கி விட்டிருக்கிறது.

போதுமான அளவு ரூபாய் நோட் டுகள் அச்சிடப்பட்டதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அப்படியானால் அந்தப் பணம் எங்கே போயிற்று? அதுதொடர்பாக அவர்கள் விசாரிக்க வேண்டாமா? வாடிக்கையா ளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வங்கிகளில் போதிய பணம் இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டாமா?

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 16 மாதங்கள் ஆகிய நிலையிலும் பல ஏடிஎம் இயந்திரங்கள் புதிய ரூபாய் நோட்டுகளை கையாளும் வகையில் மறுவடிவாக்கம் செய்யப்பட வில்லை. இதுவும் பணத் தட்டுப்பாடு பிரச்சினைக்கு ஒரு காரணம்.

மேலும், நாடாளுமன்றத்தில் ஒப் புதலுக்காக நிலுவையில் இருக்கும் 'நிதித் தீர்மானம் மற்றும் வைப்புக் காப்பீடு மசோதா'வும் ஒரு காரண மாகும். வங்கிகள் திவாலாகும் பட்சத் தில் வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகையைக் கொண்டு சம்பந்தப்பட்ட வங்கியை மீட்டெடுக்கும் வகையிலான அந்த சட்ட மசோதாவின் பிரிவுக்கு பொதுமக்களிடையே அச்சம் உள்ளது. எனவே, அரசு அந்த சட்டமசோதாவை திரும்பப் பெற வேண்டும்.

வங்கி நடவடிக்கைகளில் அனைத் தும் சரியாக இருக்கும் நிலையில், தற் போது எழுந்துள்ள இந்த பணத் தட்டுப் பாடு பொது மக்களிடையே சந்தேகத்தை யும், அச்சத்தையும் எற்படுத்தியுள்ளன. இதை தீர்க்க வேண் டியது ரிசர்வ் வங்கி மற்றும் அரசின் கடமையாகும் என்று வெங்கடாச்சலம் கூறினார்.

கடந்த சில வாரங்களாக உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ் தான், குஜராத், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கருநாடக மாநிலங்களில் கடு மையான பணத் தட்டுப்பாடு எழுந்துள் ளது. ஏடிஎம் மய்யங்களில் பண விநி யோகம் தடைப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இதனிடையே, பணத் தட்டுப் பாடு நிலவும் பகுதிகளுக்கு பணம் அனுப்பப்பட்டு வருவதாகவும், நிலைமை வெள்ளிக்கிழமைக்குள் சீரடையும் என்றும் பாரத ஸ்டேட் வங் கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் டில்லி யில் வியாழக்கிழமை கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner