எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீதிபதியாக ஜோசப்பை நியமிக்க மறுத்ததற்கு பெயர், மாநிலம், மதம் காரணமா?

மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

300

புதுடில்லி, ஏப்.28 உச்சநீதிமன்ற நீதிபதியாக கே.எம். ஜோசப்பை (குட்டியில் மாத்யூ ஜோசப்) நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜி யம் பரிந்துரைத்தும் அதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது, இதைக்கண்டித்து காங்கிரசு மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 10 ஆ-ம் தேதி தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா தலைமை யிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் கூடி உச்சநீதிமன்றத்துக்கு இரு நீதிபதிகள் பெயரை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதில், ஒருவர் மூத்த வழக்குரைஞர் இந்து மல்ஹோத்ரா, மற்றொருவர் உத்தர காண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்.

இதில் மூத்த வழக்குரைஞர் இந்து மல்ஹோத்ரா நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்ட மத்திய அரசு, ஜோசப் நிய மனத்துக்கு அனுமதி மறுத்துவிட்டது. இதற்கு, கடந்த 2016- ஆம் ஆண்டு உத் தரகாண்ட் மாநிலத்தில் மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் படுத்தியது.அந்தஉத்தரவைரத்து செய்து, மீண்டும் காங்கிரசு ஆட்சி அமைய உத்தர விட்டவர் நீதிபதி ஜோசப். ஆதலால், இப் போது அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு தடை செய்கிறது எனக் கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரசு மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''இந்து மல்ஹோத்ரா உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்கப்போவதை கேட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதேசமயம், மற்றொரு நீதிபதி கே.எம்.ஜோசப் நிய மனத்தை ஏன் மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை.

ஜோசப் நியமனத்தை மத்திய அரசு எதற்காக நிறுத்தி வைத்துள்ளது, அதற்கான காரணம் என்ன, அவர் சாந்திருக்கும் மாநிலம் காரணமா, அல்லது அவர் சாந் திருக்கும் மதம் காரணமாக, அல்லது உத்தர காண்ட் வழக்கில் அவர் அளித்த தீர்ப்புதான் காரணமா?'' என ப.சிதம்பரம்  கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner