எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தியுள்ளது பாஜக!

பிரதமர் மோடிக்கு ராகுல் பதிலடி

அங்கோலா (கருநாடகம்), ஏப்.28 கருநாடக சட்டப் பேரவைத் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான 8 பேரை வேட்பாளர்களாக முன்னிறுத்தியுள்ள பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்திருப்பதாக விமர் சனங்களை முன்வைக்கிறார் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசில் எங்கும், எதிலும் ஊழல் நிறைந்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு பதிலடியாக இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

கருநாடக சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பிரதமரின் கூற் றுக்கு பதிலடி தரும் வகையில் சில கருத்துகளை தெரிவித் துள்ளார். வியாழக்கிழமை நடை பெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது:

கருநாடக மக்களுக்கு தற் போது இரண்டு விதமான வாய்ப்புகள் உள்ளன. ஒரு புறம் காங்கிரஸ் கட்சி; மறு புறம் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட் டின் கீழ் உள்ள பாரதிய ஜனதா கட்சி. ஏழைகள், விவசாயிகள், பின்தங்கிய மக்களின் நல னுக்காக செயல்பட்டு வரும் கட்சி காங்கிரஸ். ஆனால், பாஜகவோ, ஏழைகளின் சட் டைப் பைகளில் உள்ள பணத்தைப் பறித்து தொழி லதிபர்களிடம் வழங்கும் கட்சி. இதில் எது சிறந்தது என சிந்தித்து வாக்களிக்க வேண்டும். பெரு நிறுவன முதலாளிகள் பெற்ற பல லட்சம் கோடி கடனை ரத்து செய்த மத்திய பாஜக அரசு, ஏன் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய மறுக்கிறது? என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். கருநாடக அரசில் ஊழல் நிறைந்திருப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சிறை சென்று வந்த எடியூரப்பா உள் ளிட்ட சிலரை அருகில் வைத் துக் கொண்டு இத்தகைய விமர் சனத்தை அவர் முன்வைக் கிறார். இம்முறை மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட் பாளர்களில் 8 பேர் ஊழல் குற் றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் என்றார் ராகுல் காந்தி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner