எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா பதவியேற்றார்

புதுடில்லி,  ஏப்.28 உச்சநீதி மன்ற நீதிபதியாக மூத்த வழக் குரைஞர் இந்து மல்ஹோத்ரா வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டார். கீழ் நீதிமன் றங்களில் நீதிபதியாக பணிபுரி யாமல் உச்ச நீதிமன்ற நீதி பதியாக பெண் வழக்குரைஞர் ஒருவர் நேரடியாக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

 

நேற்று (ஏப்.27) உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பதவி யேற்றார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றம் அமைந்து 67 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இதுவரை ஆறு பெண்கள் மட்டுமே அங்கு நீதிபதிகளாக வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பணியாற்றி பின்னர் பதவி உயர்வு பெற்றவர்கள் ஆவர். தற்போது நேரடியாக நியமிக்கப்பட்டி ருக்கும் இந்து மல்ஹோத்ரா, உச்ச நீதிமன்றத்தின் 7-ஆவது பெண் நீதிபதியாவார். இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞராக செயல்பட்டு வருகிறார். இன்றைய நிலையில், இந்து மல்ஹோத்ராவை தவிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் பெண் நீதிபதி பானுமதி ஆவார். கடந்த 2014-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இவரது பதவிக்காலம் 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் முதலாவது பெண் நீதிபதியாக பாத்திமா பீவி, கடந்த 1989-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டு 1992-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். பின்னர் அவர் தமிழக ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner