எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எதிலும் மவுனம் சாதிக்கும் பிரதமர் மோடி

ராகுல் காந்தி தாக்கு

புதுடில்லி, ஏப்.30 காங்கிரசு கட்சி சார்பில் ஜன் ஆக்ரோஷ் (மக்களின் கோபம்) என்ற பெயரில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று (29.4.2018) மாபெரும் பொதுக் கூட்டம் நடை பெற்றது. நடைபெற உள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் னோட்டமாக நடந்த இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தை கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்கி வழி நடத்தினார்.

கூட்டத்தில் உரையாற்றிய அவர் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக தாக்கி பேசினார். அவர் உரையாற்றும் போது கூறியதாவது:-

இந்திய திருநாடு நம்பிக்கைக்கு பெயர்பெற்றது. உண்மை என்ற அடித் தளத்திலேயே நம்பிக்கை கட்டமைக்கப் படுகிறது. ஆனால் கடந்த 4 ஆண்டு களாக பிரதமர் நரேந்திர மோடி, பொய் யான வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். தற்போது இதை மக்களும் புரிந்து கொண்டுவிட்டனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட் சியில் ஊழல், வன்முறை சம்பவங்கள் அதிகரித்து விட்டது. மத்திய அமைச் சர்களின் ஊழல்கள், தலித், பெண்கள், சிறுபான்மையினர் மீதான வன்முறை, மிகப்பெரிய வங்கி முறைகேடுகள் உள் ளிட்ட விவகாரங்களில் பிரதமர் மோடி கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்.

நாட்டின் அரசியலமைப்பு நிறு வனங்கள் பலவீனப்படுத்தப்படுதல், லோயா வழக்கு போன்றவை குறித்து அவர் மவுனமாகவே இருந்து வருகிறார். விவசாயிகள் நெருக்கடியில் இருக்கின் றனர். ஆனால் அவர்களுடைய கடனை தள்ளுபடி செய்யாமல், கார்பரேட் நிறு வனங்களுக்கு கடன் தள்ளுபடி செய் கிறார்.

வேலைவாய்ப்பின்மை, கப்பார் சிங் வரி (ஜி.எஸ்.டி.), பெண்கள் மீதான பா.ஜனதாவினரின் வன்முறைகளையே நாட்டுக்கு பிரதமர் மோடி தந்து இருக் கிறார். சீன பயணத்தின் போது டோக் லாம் விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. என்ன மாதிரியான பிரதமர் அவர்?

பா.ஜனதாவை போல இல்லாமல் காங்கிரசு கட்சி கடந்த 70 ஆண்டுகளாக சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஒன்றிணைத்து, அன்பை பரப்பி வரு கிறது. ஆனால் கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது காங் கிரசுக்கு எதிராக பா.ஜனதாவும், ஆர். எஸ்.எஸ்.சும் தவறான தகவல்களை பரப்பின.

ஆனால் உண்மை என்னவென்பது 4 ஆண்டுகளுக்குப்பிறகு வெளிவரத் தொடங்கி உள்ளது. உண்மையின் சக்தியை குஜராத் தேர்தலில் காங்கிரசு தொண்டர்கள் காட்டிக்கொடுத்தனர். அதைப்போல வர இருக்கிற கருநாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் சட்டசபை தேர்தலிலும், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்த லிலும் காங்கிரசு வெற்றி பெறும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner