எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கட்சித் தொண்டர்களுக்கு பாடம் நடத்தும் ஆனந்திபென் பட்டேல்!

 

மத்தியப் பிரதேச ஆளுநருக்கு காங்கிரசு கடும் கண்டனம்!

போபால், ஏப். 30 -பா.ஜ.க. வைச் சேர்ந்தஆளுநர் என்றாலே இப்படித்தான் இருப்பார்களா? பிரச்சினை செய்யாமல் அவர் களால் இருக்கவே முடியாதா? என்று கருதும் விதத்தில் மேலும் ஒரு பா.ஜ.க.ஆளுநர் பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பது எப்படி என்று பாடம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் மத்தியபிரதேச மாநில ஆளுநராக இருக்கும், குஜராத் முன்னாள் முதலமைச்சரான ஆனந்திபென்பட்டேல்தான்!

இது பற்றி தி நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டின் 28.4.2018 இதழில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டி ருப்பதாவது: -மத்திய பிரதேச மாநிலத்திற்கு குடியரசுத் தலை வரான ராம்நாத்கோவிந்த் வர விருக்கும் நிலையில், பா.ஜ.க. ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் அம்மாநில ஆளுநர்ஆனந்திபென் பட்டேல் ஏற்படுத்திய அரசியல் சர்ச்சை சமூக ஊடகங்களில் வைர லாகப் பரவி வருகிறது. ஆளுந ரான ஆனந்திபென் பட்டேல் தனது அரசியல் அமைப்புச் சட்ட அதிகாரத்தைத் துஷ்புர யோகம் செய்வதுகுறித்து குடிய ரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் துக்கு எதிர்க்கட்சியானகாங்கிரசு கடிதம் எழுதத் திட்டமிட்டு வருகிறது. இந்த ஆண்டுஇறுதியில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆனந்தி பென் பட்டேலின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. வைரலாகப் பரவிவரும் அந்த வீடியோவில் மத்திய பிரதேச ஆளுநர் பா.ஜ.க. தலை வர்களுக்கு வாக்கு சேகரிக்கும் முறைபற்றி அறிவுரை கூறி யுள்ளார். தேவைப்படுகிற மற்றும் ஊட்டச் சத்து இல்லாத குழந்தைகளைமடியில் ஏந்திக் கொண்டு சென்றால்தான் நீங்கள் வாக்கு பெற முடியும். அதிகாரிகளுக்கு வாக்குதேவையில்லை. உங்களுக்கும் எனக் கும் தான்வாக்கு வேண்டும். இந்த குழந்தைகளுக்காகப் பணியாற்றினால்தான்நீங்கள் வாக்கு பெற முடியும். இத்தகைய குழந்தைகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப் பட்ட பிரச்சாரத்தை நடத் துங்கள். சட்னா நகர்மேயர் மம்தா பாண் டேகட்சி எம்.எல்.ஏ. சங்கர்லால் திவாரி மாவட்டக்கட்சித் தலை வர் நரேந்திர திரிபாதி ஆகியோரும் நிர்வாக அதிகாரிகளுடன் அந் தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

நீங்கள் தேவைப்படுகிற, ஊட்டச் சத்துக்குறைவான குழந்தைகளை தத்து எடுத்துக் கொண்டு, மாநகராட்சி கவுன் சிலர் அளவுக் குபணியாற்றி னால் தான் நீங்கள் வாக்கு பெறமுடியும். அதன் மூலம் நரேந்திர மோடியின் (பிரதமர்) கனவை நிறைவேற்ற முடியும் என்றுஅவர் பேசியுள்ளார். கடந்த வியாழனன்றுசட்னா மாவட்டத்தின் சித்ர கூட்டுக்கு ஆளுநர்ஆனந்திபென் பட்டேல் சென்றிருந்தார்.

இந்த வீடியோவைப்பார்த்த காங்கிரசு செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலூஜா, ஆளுநர் தன்னுடைய அரசியலமைப்புச் சட்ட அதிகாரத்தை   செய்திருப் பது தெளிவாகத் தெரிகிறது. அரசியல் சார்பற்ற பொறுப்பில் இருக்கும் ஆளுநர் அதை தனது கட்சிக்கு ஆதரவாகப் பயன் படுத்தியுள்ளார்.

இது மரபுக்கு எதிரானது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எந்த ஒருஆளுநரும் எந்தவொரு அரசியல் கட்சிக் கும் மேலாளராகச் செயல்படக் கூடாது நாங்கள் இது பற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுது வோம் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு தி நியூஇந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட் டின் சிறப்புச் செய்தியில் குறிப் பிடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner