எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப். 30- அய்டியா செல்லுலார் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர இழப்பு மும் மடங்காக உயர்ந்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது: அய்டியா செல்லுலார் நிறு வனத்தின் செயல்பாட்டு வரு வாய் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் 24.47 சதவீதம் சரிந்து ரூ.6,137.3 கோடியானது. இதையடுத்து, ரூ.325.6 கோடி யாக இருந்த நிகர இழப்பு ஏறத்தாழ மும்மடங்கு உயர்ந்து ரூ.930.6 கோடியை எட்டியுள் ளது. 2016--17 நிதி ஆண்டில் ரூ.36,676.8 கோடியாக காணப் பட்ட செயல்பாடுகள் வாயி லான வருவாய் 2017--18 நிதி ஆண்டில் ரூ.28,278.9 கோடியாக சரிவைக் கண்டது. வருவாய் வீழ்ச்சி கண்டதையடுத்து ரூ.404 கோடியாக இருந்த நிகர இழப்பு பலமடங்கு அதிகரித்து சென்ற முழு நிதி ஆண்டில் ரூ.4,139.9 கோடியைத் தொட்டு உள்ளது. டிராயின் கடுமையான விதிமுறைகள் மற்றும் சந்தை யில் காணப்படும் கடுமையான போட்டி ஆகியவை தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிதி நிலைமையை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளன. அய்டியா செல்லுலாரை வோடாஃபோன் நிறுவனத் துடன் இணைக்கும் நடவடிக் கைகள் இறுதி கட்டத்தை எட் டியுள்ளது. நடப்பு ஆண்டு ஜூன் மாதத்துக்குள் இது முழு மையடையும் என்று எதிர்பார்க் கப்படுகிறது என அய்டியா செல்லுலார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner