எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிபிசி நிறுவனத்தின் பெயரில் போலியான கருத்துக்கணிப்பு- பிபிசி நிறுவனமே மறுப்பு சங் பரிவாரங்களின் பித்தலாட்டம் அம்பலம்

புதுடில்லி, மே9- பிபிசி நடத்தியதாக வெளியான கருத்துக் கணிப்பில் கருநாட காவில் பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்யப்படும் நிலையில் அச்செய்தி பொய்யானது என தெரிய வந்துள்ளது. ஜன் கி பாத் என்கிற பெயரில் பிபிசி இந்த கருத்துக்கணிப்பு நடத்தியதாக சங்பரி வார் கும்பல்கள் பிரச்சாரம் செய்து வரு கின்றன. மே 12இல் தேர்தல் நடக்க விருக்கும்நிலையில் பாஜக வெற்றி பெறும் என்கிற இந்த பொய்ப் பிரச்சாரத்தை திங்களன்று (மே 7) தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் பாஜக கருநாடக தேர்தலில் முன்னிலை பெறும் என்பது போன்ற கருத்துக்கணிப்பு எதையும் தாங்கள் செய்ய வில்லை என அதே நாளில் டிவிட்டர் மூலம் பிபிசி தெரிவித்துள்ளது. போலியான கருத்துக்கணிப்பில் காங் கிரசுக்கு 35 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 45 இடங்களும், பாஜக வுக்கு 102 முதல் 105 இடங்கள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவியில் ஜன் கி பாத் என்கிற பெயரில் தற்போது கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. பிபிசி இந்தியா பெயரில் பதிவுகள் வாட்ஸ்அப், முகநூ லிலும் அந்த செய்தி பரவலாக பகிரப் பட்டன. ஆனால், சங்பரிவார் மேற்கொண்ட இப்பிரச்சாரம் பொய்யானது என பிபிசி நிறுவனமே மறுப்புத் தெரிவித்துள்ளது பாஜகவுக்கு பேரடியாக மாறியுள்ளது.

கருநாடக தேர்தல்குறித்து பிபிசி நிறு வனத்தின் பெயரில் சங் பரிவார் கும்பலின் போலியான பதிவுக்கு பிபிசி நிறுவனம் அதன் டிவிட்டர் பக்கத்தில் மறுப்புத் தெரிவித்துள்ள பிபிசி நிறுவனத்தின் பதிவை, கருநாடக முதல்வர் சித்தராமையா தன்னு டைய டிவிட்டர் பக்கத்திலும் மறுபதிவிட் டுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner