எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 22 சிவில் சர்வீஸ் பதவிக்கான மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர்  தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் பதவிக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் மத்திய அரசு புதிய உத்தரவை பரிந்துரைத்துள்ளது.  பிரதான தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன், அடிப்படை பயிற்சி தேர்வில் பெறும் மதிப் பெண்ணை சேர்த்து அதன் அடிப்படையில் அய்ஏஎஸ், அய்பிஎஸ்  பதவிக்கான நியமனம் செய்யப்பட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது  டிவிட்டர் பதிவில், அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வின் தகுதியை நிர்மூலமாக்கும் மோசமான முன்மொழிவை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.  அடிப்படை  பயிற்சி மதிப்பெண்ணை சேர்ப்பதன் மூலம், யுபிஎஸ்சியின் தகுதி அழிந்து, இளைஞர்களின் கனவை சிதைத்து விடும். இது மன்னிக்க  முடியாதது! என கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner