எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 28- புதுடில்லியில் டைம் மிசின் என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. முன்னாள் குடியரசுத் தலை வர் பிரணாப் முகர்ஜி, முன் னாள் குடியரசுத் துணைத் தலை வர் அமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச் சியில் அமீது அன்சாரி பேசும் போது:-

வரலாறு என்பது வரலாறு மட்டுமே. அதனை படிக்க லாம். நீங்கள் அதிலிருந்து பாடங்களை எடுத்துக்கொள் ளலாம். ஆனால், அதனை மாற்ற முடியாது. சிலர் வர லாற்றை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் கள் அம்முயற்சியில் தோற்றுப் போவார்கள். ஏனெனில் வர லாறு என்பது மாற்ற முடியாதது என அமீது அன்சாரி பேசினார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வரலாற்றை மாற்ற முயற்சிக் கிறது என எதிர்க்கட்சிகள் குற் றம் சாட்டி வரும் நிலையில், அமீது அன்சாரி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner