எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூன் 6 சிங்கப்பூர் பயணத்தின்போது, நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி நேர்காணலில் பங்கேற்றார்.

அதில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி இந்தியில் பதிலளித்தார். ஒரு சமயத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்கு மோடி பதில் அளித்து கொண்டிருக்கையிலேயே, அருகில் இருந்த ஆங்கில மொழி பெயர்ப்பாளர் காகிதத்தில் எழுதி வைத்திருந்ததை உடனடியாக படிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், இது முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கேள்விகள் என்ற யூகத்தை ஏற்படுத்தி உள்ளதாக காங்கிரசு தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், மொழிபெயர்ப்பாளருக்கு முன்கூட்டியே எழுதி தரப்பட்ட பதில்களுடன் தன்னிச்சையாக கேள்விகளை தயாரித்துக்கொண்ட முதல் இந்திய பிரதமர் இவர்தான். நல்ல வாய்ப்பாக பிரதமர் மோடி உண்மையான கேள்விகளை எடுத்துக்கொள்ளவில்லை. அவர் அவ்வாறு உண்மையான கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தால் அது நமக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.மோடி ஆட்சியை 2019-இல் வீழ்த்துவோம்!

கூறுகிறார் விஎச்பி முன்னாள் தலைவர் தொகாடியா

கவுகாத்தி, ஜூன் 6 -விஸ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங் தளத்தில் இருந்து 90 சதவிகிதம் பேர் விலகி விட்டதாக, விஎச்பி-யின் முன்னாள் தலைவர் பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.

விசுவ இந்து பரிசத்தில் இருந்து வெளியேறி, தனிக் கட்சி ஒன்றை தொகாடியா துவங்கியுள்ளார். இந்த கட்சி, 2019 தேர்தலில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் என்று ஏற்கெனவே அறிவிப்பு செய்திருந்தார். இந்நிலையில்தான், தனக்கு ஆதரவாக விஎச்பி, பஜ்ரங் தள் அமைப்புகளிலிருந்து 90 சதவிகிதம் பேர் விலகி விட்டதாககூறியுள்ளார். அசாம் மாநிலத்தில் மட்டும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த 14 ஆயிரம் பேரில் 13 ஆயிரத்து 900 பேர் பதவி விலகியுள்ளனர்.

கவுகாத்தி நகரில் பஜ்ரங் தள் பிரமுகர்கள் 820 பேரில் 816 பேர் பதவி விலகி விட்டனர். விஸ்வ இந்து பரிசத்திலும் அசாம் மாநில ஆலோசகர் சர்மா உள்பட அதன் நிர்வாகிகள் 400 பேரில் 380 விலகி விட்டனர். இந்நிலையில், இவர்கள் அனைவரும் விலகியதற்கு காரணம் மோடிதான் என்றும், விலகியவர்கள் அனைவரும் 2019 தேர்தலில் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கு தயாராகி வருவதாகவும் தொகாடியா தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner