எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 9- குஜராத் தேர்தலை யொட்டி, பாகிஸ்தான் அரசு அதிகாரிகள், காங்கிரசு தலைவர்களை சந்தித்து பேசி யதாக பிரதமர் மோடிகுற்றம் சாட்டி யதற்கு எந்த ஆதாரமும் இல்லை என பிரதமர் அலுவலகமே மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டுடிசம்பர் 10-ஆம் தேதி குஜராத் தேர்தலையொட்டி பிரதமர் பேசுகையில்,

காங்கிரசு தலைவர் மணிசங்கர் அய்யரின் டில்லி இல்லத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர், அந்நாட்டு தூதரக அதிகாரிகளுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குஜராத் தேர்தல் தொடர்பாக மூன்று மணிநேரம் ஆலோசனை நடத்தியதாக குற்றம் சாட்டினார்.இந்நிலையில், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சாகேத் கோகலே என்பவர் பிரதமர் அலுவலகத்திற்கு, தக வல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் டிசம்பர் 12- ஆம் தேதி மனு ஒன்றை அனுப்பினார்.

அதில், மோடியின் குற்றச்சாட்டு எதனை அடிப்படையாக கொண்டது. அதற்கான ஆதாரம் என்ன? என்று கேட்டறிந்தார். மனு நீண்ட நாள்களாக கிடப்பில்கிடந்த நிலையில், கோகலே மீண்டும்மேல்முறையீடுசெய்தார். அவரதுமேல்முறையீட்டுமனுவுக்கு பலனாக 30 நாள்களில் பிரதமர் அலுவலகம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி பிரதமர் அலுவலகம் தனது பதிலை கோகலேவுக்குஅனுப்பியுள்ளது. அதில், மோடியின் குற்றச்சாட்டு குறித்ததகவல்கள் இந்த அலுவலகத்தில் எந்த பிரிவிலும் இல்லை; பல்வேறு தரப்பில் இருந்து வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு பிரதமர் மோடி பேசியிருக்கலாம் என பதிலளிக் கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner