எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 9 இந்திய வங்கிகள் சென்ற நிதியாண்டில் ரூ.40 ஆயிரம் கோடிஅளவில் வரு வாய் இழப்பை சந்தித்துள்ளன.

மோடி அரசின் திறனற்ற நடவடிக்கைகளால் இந்திய வங் கிகள் நெருக்கடியில் தள்ளப்பட் டுள்ளன. மக்களின் பணம், வரிப்பணம் வேறு எங்கோ சென்று கொண்டிருப்பதைத்தான் இது வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கிறது. பணக்காரர் களுக்கானஅரசாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக மோடி அரசு செயல்படுவதையே வங்கிகள்திவால் என்ற நிலை சுட்டிக்காட்டுகிறது.

இது குறித்த விவரம் வருமாறு:-நடப்பு நிதியாண்டில், இந்தியவங்கிகளின் செயற்படா சொத்து மதிப்பு, முன்னெப்போ தும் இல்லாத வகையில் 11.5 சதவிகிதமாக உயரும் என்று கிரிசில் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

2017 மார்ச் 31 ஆம் தேதி யுடன் நிறைவடைந்த நிதியாண் டில் இந்திய வங்கிகளின் செயற் படாசொத்து மதிப்பு ரூ. 8 லட்சம் கோடியாக இருந்தது. இது 2017-18நிதியாண்டின் நிறைவில் 11.2 சதவிகித உயர்வுடன் ரூ. 10 லட் சத்து 30 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.அதுவே இந்த நிதி யாண்டில்,இன்னும் அதிகரித்து 11.5 சதவிகிதத்தை எட்டும் என்று கிரிசில் நிறுவனம் எச்சரித்துள்ளது.

செயற்படா சொத்துகளின் அளவு அதிகரித்து வருவதன் காரணமாக, இந்திய வங்கிகள் சென்ற நிதியாண்டில் ரூ. 40 ஆயி ரம் கோடி வருவாய் இழப்பைச் சந்தித்திருந்தன.

அத்துடன் ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை வராக்கடன்களாக மாற்றின. ஒட்டுமொத்தமாக கடந்த மூன்று நிதியாண்டுகளில் வங்கிகளின் வராக்கடன் ரூ. 13 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. தற்போது இது மேலும் அதிகரிக் கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, வராக்கடன் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாத மோடி அரசு, 2018-ஆம் ஆண்டுக்கான மொத்த வராக் கடனில், 5 -இல் ஒரு பங்கு வங்கிக் கடனை மீட்பதற்காக வங்கி திவால் சட்டம் கொண்டு வருவதாகவும், வங்கித் துறையை மேம்படுத்துகிறோம் என்ற பெய ரில், வருவாய் இழப்பைச்சந்தித்து வரும் பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைக்கப்போகிறோம் என்றும் கண்துடைப்பு நடவடிக் கைகளை முன் வைத்தது.

அந்த வகையில், ஒட்டு மொத்தமாக ரூ. 21 ஆயிரத்து 646 கோடிவருவாய் இழப்பைச் சந்தித்துள்ள பாங்க் ஆப் பரோடா, சென்ட்ரல்பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல்பாங்க் ஆப் காமர்ஸ், அய்.டி.பி.அய். வங்கி ஆகிய நான்கு பொதுத்துறை வங்கிகளை யும் ஒன்றிணைக்கும் வேலையில் தற்போது தீவிரமாகியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner