எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி ஜூன் 10 காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் பாண்டியன் திடலில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கே ஆர். ராமசாமி தலைமை வகித்திட முன்னாள் எம்.எல்.ஏ. ந.சுந்தரம்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ச.மாங்குடி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்புரை ஆற்றி னார். அவர் தனது உரையில்

நம் நாட்டில் விவசாயிகள், இசுலாமி யர்கள், கிறித்தவர்கள், தலித்துக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். காரணம் ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்புதான்.அது மேல் ஜாதிக்காரர்களுக்கானது.

மேலாதிக்க உணர்வு கொண்ட ஒரு அமைப்பாகும்.அந்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மூலமாக நாட்டில் இந்தியை திணிக்க, இந்துத்துவாவை திணிக்க முயல்கிறார்கள்.நாம் அதை அனுமதிக்க கூடாது. நாம் தமிழர்,நமக்கென்று தொன் மையான மொழி இருக்கிறது. பண்பு, தன்மானம் இருக்கிறது. யார் மாதா கோவிலுக்கு போகிறார்கள்,யார் மசூதிக்கு போகிறார்கள் என்ற பேதம் கிடையாது. எனவே இந்தி திணிப்பையும்,இந்துத்துவா திணிப்பையும்எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.ஆர்.எஸ்.எஸ் ஒரு நச்சுக் காற்று.அதன் மூலம் பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற துடிக்கிறது.

ஒருவேளை அதை நாம் அனுமதித்தால் வடநாட்டை போல தென்னகத்திலும் அச்சமான சூழல் வந்து விடும்.எனவே ஒரு நாளும் தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற விடமாட்டோம்.

பிரதமர் மோடி என்ன சொல்லி வாக்கு கேட்டார்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அது இந்த நாட்டிற்கு அச்சா திண் என்று சொன்னார்.அதாவது குடுகுடுப்பைக் காரண் சொல்வது போல நல்ல காலம் பொறக்க போகுது என்று சொன்னார்.அதை நம்பி நீங்களும் வாக்களித்து பிரதமராக வைத்தீர்கள்.

அதன் விளைவு இன்று நாட்டில் வேலையிழப்பு, தொழில் துறையில் இழப்பு,ஏற்றுமதி இழப்பு என்று ஏற்பட்டு உள்ளது.அதை விட பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள் தனமாண அறிவிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி நான் சொன்னது போல 1.5 சதவிகித குறைந்து போனது. இந்த சுமையை மோடியின் கோமாளித்தனமாண,போக்கிரித்தனமாண அரசு நம்மீது திணித்திருக்கிறது. வேலை வாய்ப்பை உருவாக்க வில்லை. அதேபோல ஜி.எஸ்.டி.யை அறிமுக படுததியது நான்தான். உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட அந்த ஒருமுக வரியை நாங்கள் அமல்படுத்த வேண்டும் என்ற போது அதை மூர்க்கத் தனமாக எதிர்த்த மோடி இப்போது அவசர கதியில் அந்த சட்டத்தை அமல்படுத்தினார்.அந்த சட்ட வடிவம் பிழையானது என்று நாடாளுமன்ற விவாத்த்தில் பேசினேன். 18 சதவிகிதத்துக்கு மேல் வரி விதிப்பு கூடாது என்பது தான் சரியாக இருக்கும். ஆனால் 8 விதமாக வரியை நிர்ணயம் செய்து உள்ளனர்.இதைத்தான் கப்பர்சிங் வரி அதாவது கொள்ளைக்காரன் வரி என்று ராகுல் காந்தி சொன்னார். இன்றைக்கு அதை எதிர்த்து வழக்கு தொடுத்து உள்ளோம்.நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதை திருத்திஅமைப்போம். ஏற்றுமதி,தனியார் முதலீடு,நுகர்வோர் வாங்கும் திறன்,அரசு செலவு என்ற நான்கு டயர்களை கொண்ட கார் போல ஒரு அரசு இயங்க வேண்டும். ஆனால் மோடி ஆட்சியில் முதல் மூன்று டயர்கள் பங்சர் ஆகி விட்டது. வங்கிகளில் தொழில் தொடங்குவதற்கு என்று கடன் அளிப்பதில்லை.

வங்கிகளுக்கு சென்றால் அதிகாரிகள் இடத்தில் சி.பி.அய்.அதிகாரிகள்தான் அமரந்துள்ளனர். இவர்களை ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய அனுமதிக்க கூடாது.கடந்த தேர்தலில் மோடிக்கு 31 சதவிகித மக்கள் வாக்களித்தனர் என்பது உண்மைதான்.அதேநேரத்தில் 69 சதவிகித மக்கள் அவருக்கு வாக்களிக்க வில்லை என்பதை மோடி மறந்து விடக்கூடாது.அவர்களின் கைப்பாவையாக,பொம்மை களாக, தமிழக ஆட்சி திகழ்கிறது.செய லற்ற,செயலிழந்த ஆட்சியையும், மத்திய அரசையும் அகற்றிட உறுதி ஏற்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள் கிறேன் என்று பேசினார்.முடிவில் நகர தலைவர் என்.பாண்டி மெய்யப்பண் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner