எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 13- மத்தியில் ஆளும் மோடி அரசின் நட வடிக்கைகள் மிகவும் வேடிக் கையாக இருப்பதாக காங்கிரசு மூத்தத் தலைவர் மணீஷ்திவாரி விமர்சித்துள்ளார்.

அதாவது, தேசிய ஜனநாய கக் கூட்டணி அமைச்சர்கள் மற்ற துறை சார்ந்த கருத்துக் களை தெரிவிப்பதில் காட்டும் ஆர்வத்தைத் தங்களின் சொந்தத் துறையில் காட்டுவதில்லை என்று கூறியிருக்கும் திவாரி, பேசாமல்அமைச்சர்களின் துறைகளைமாற்றி விடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள மணீஷ் திவாரி, இங்கே நடப் பது உண்மையில் வேடிக்கை யான ஒரு அரசு, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முகநூல் பதிவில் சட்ட நடவடிக்கைகள் பற்றி கருத்து தெரிவிக்கிறார்; சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாதுகாப்பு விவகாரங் களில் அழுத்தம் கொடுக்கிறார்; பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமனோ, நிதித்துறை பற்றி கருத்து வெளியிடுகிறார்; ஆனால், தங்கள் சொந்த துறை யின் விவகாரங்கள் குறித்து ஒரு அமைச்சரும்ஒழுங்காக பேசுவதில்லை; பேசாமல், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புகளை மாற்றிய மைத்து விடலாம் என்று தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக் கான கொலீஜியத்திற்கு தகுந்த காரணங்களுடன் பரிந்துரை செய்ய மத்தியஅரசுக்கு உரிமை உண்டு என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி அண்மையில் கூறியிருந்தார். இதற்குப் பதி லடிகொடுக்கும் விதமாகவே மணீஷ் திவாரி மேற்கண்டவாறு விமர்சித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner