எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 14- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நீதித் துறையை அவமதித்து வருவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு கொலீஜியம் அனுப்பிய பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. மேலும், இத்தகைய பரிந்துரையை அனுப்புவது தொடர்பான முடிவுகளை மறுபரி சீலனை செய்யுமாறும் மத்திய அரசு கொலீஜியம் குழுவிடம் தெரிவித்தது. இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி யது.

குறிப்பாக, உத்தரகண்டில் மத்திய அரசின் ஆலோசனையின்பேரில் அமல் படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்தவர் நீதிபதி ஜோசப் என்பதால், அவரது பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போடப் படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், டில்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன் றில் பங்கேற்ற ரவிசங்கர் பிரசாத், மத்திய அரசின் மீதான விமர்சனங்க ளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசி னார். பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியம் குழுவிடம் வலியுறுத்துவது ஒன்றும் பெரும் பாவம் அல்ல என்று அவர் கூறினார். மேலும், நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைகளை வாங்கி குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் பணியை மட்டும் செய்ய மத்திய அரசு ஒன்றும் அஞ்சல் அலுவலகம் கிடையாது என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இந்தக் கருத்துக்கு மாயாவதி கண் டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர் பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டி ருப்பதாவது:

நீதிபதிகள் நியமனம் தொடர்பான விவாதங்கள் எழும்போது எல்லாம் மத்திய சட்ட அமைச்சகம் ஒரே கருத் தையே திரும்ப திரும்ப கூறி வருகி றது. அதாவது, வெறுமனே அஞ்சலகம் போல தங்களால் செயல்பட முடியாது எனத் தெரிவிக்கின்றது.

மத்திய சட்ட அமைச்சகம் அஞ்சலகம் போல செயல்படாது எனும் போது, காவல் துறை போல கண் காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடு வது மட்டும் சரியா? பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நீதித் துறையை மதிக்கத் தெரியா விட் டாலும் பரவாயில்லை; அவமதிக்காம லாவது இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மாயாவதி தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner