எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 18 டில்லி ஆளுநர் அலுவலகத்தில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் 3 டில்லி அமைச்சர்களும் உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், இவ்விவகாரத்தில் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவரது இல்லம் நோக்கி பேரணியாக புறப்பட்டு செல்வோம் என ஆம் ஆத்மி தேசிய பொதுச் செயலாளர் பங்கஜ் குப்தா அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், தலைநகரான டில்லியில் நேற்று ஆம் ஆத்மி அமைச்சர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு அவர்கள் அனைவரும் பிரதமர் மோடி வீட்டுக்கு பிரம்மாண்ட பேரணியாக சென்றனர். இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், ஆம் ஆத்மி பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை. பேரணியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தனர்.

ஆம் ஆத்மி பேரணி நடைபெறுவதையொட்டி டில்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க், பட்டேல் சவுக், மத்திய தலைமைச் செயலகம், உத்யோக் பவன் மற்றும் ஜன்பத் ஆகிய ரயில் நிலையங்களின் இரு வாயில்களும் அடைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

பாஜக தலைவர்களால் எனது சகோதரர் உயிருக்கு ஆபத்து

கோரக்பூர் மருத்துவர் கபில்கான் குற்றச்சாட்டு

லக்னோ, ஜூன் 18 உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். தொடர்ந்து அந்த மருத்துவ மனையில் குழந்தைகள் இறந்து வருவது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து உ.பி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவர் கபில்கானை உ.பி. மாநில சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். இதற்கிடையே, கோரக்பூர் மருத்துவமனை விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவர் கபில் கானின் சகோதரர் காஷிப் ஜமீல் மீது சில நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்நிலையில், பாஜக தலைவர்களால் எனது சகோதரர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என கோரக்பூர் மருத்துவர் கபில்கான் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கபில் கான் கூறுகையில், எனது சகோதரரை சுட்டவரை 48 மணி நேரத்தில் பிடித்திருக்கலாம். ஆனால் சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும் யாரையும் கைது செய்யவில்லை.

பாஜக தலைவர்களால் எனது சகோதரர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் சிபிஅய் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner