எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 18- புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் வழங்க வேண்டுமென்றால் தங்களுக்கு மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ், சோலார் தெரு விளக்குகள்  அமைத்து தர வேண்டும் என்று பால்கர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மும்பை--அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவையை வருகிற 2022ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண் டும் என்று அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டம்  நிறை வேற்றப்பட்டால் மும்பையில் இருந்து அகமதாபாத் செல்வதற் கான பயண நேரமானது 7 மணியில் இருந்து 3 மணி நேரமாக குறையும். இதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

508கி.மீ புல்லட் ரயில் பாதையில், 110 கி.மீ. வரை மகாராஷ்டிராவின்  பால்கர் மாவட்டத்தில் நிலம் தேவைப் படுகிறது. இதற்காக, 73 கிரா மங்களில் 300 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால், 3000 பேர்  பாதிக்கப் படுவார்கள். 50 கிராம மக்கள் விரைவில் அனுமதி அளிக்க உள்ள நிலையில், 23 கிராம மக்கள் நிலங்களை வழங்க முன்வர மறுத்துள்ளனர்.   அவர் கள் புல்லட் ரயில் திட்டத்துக் காக நிலம் வழங்க வேண்டு மென்றால் தங்களுக்கு பல் வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவை தனிப்பட்ட முறையிலான கோரிக்கைகள் கிடையாது. அடிப்படை வசதியான தெரு விளக்குகள், ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவை  செய்து தரப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேன்குந்தர் கிராம மக்கள் 5 ஹெக்டேர் பரப்பளவில் அமைந் துள்ள ஏரிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

குர்ட் மற்றும் விக்ரம்கர் கிராம மக்கள் தடையில்லா மருத்துவ வசதி தேவை என்று தெரிவித்துள்ளனர். பீட்டி கிராமத்தினர் ஆம்புலன்ஸ் வசதி,  சோலார் தெரு விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்றும், கெல்வா மக்கள் தொடர்ச் சியாக மருந்துகள் சப்ளை செய் யப்பட வேண்டும் என்றும்  நிலங்களை கையகப்படுத்தும் தேசிய அதிவேக ரயில் கார்ப்ப ரேஷன் லிமிடெட் நிறுவனத்தி டம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக என்எச்ஆர்சிஎல் செய்தி தொடர்பாளர் தனன்ஜய் குமார் கூறுகையில், நில உரி மையாளர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர்கள்  நிலத் துக்கான இழப்பீட்டுத் தொகை யுடன் வேறு என்னென்ன தேவை என்பது குறித்து எழுத்து மூல மாக அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner