எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 21- அரசுப் பள்ளிகளிலிருந்தும், உழைக் கும் வர்க்கக் குடும்பங்களிலி ருந்தும் வரும் மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைக்கக்கூடாது என்பதற்காக, டில்லி பல் கலைக்கழகமானது, கட்-ஆப் மதிப்பெண்களை உயர்த்தியுள் ளது. இதற்கு எதிராக டில்லியில் இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து போராட்டத்தை துவக்கியுள்ளன.

டில்லிப் பல்கலைக் கழகத் தின் மொத்த பட்டதாரி மாண வர்களுக்கான எண்ணிக்கை 56 ஆயிரம் ஆகும். இந்த இடங் களுக்கு நடப்பாண்டில் 2 லட்சத்து78 ஆயிரத்து 544 மாண வர்கள் விண்ணப்பித்துள்ளனர். டில்லியில் மட்டும் 12-ஆம்வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண் ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரம். டில்லி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் அதிகமான அளவில் வெற்றி பெற்றுள் ளனர். ஆனால், இவர்களுக்கான போதிய உயர்கல்வித் தேவைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களை, கல்லூரிகளை மத்திய ஆட்சி யாளர்களும், டில்லி மாநில ஆட்சியாளர்களும் உருவாக்க வில்லை. கடந்த 25 ஆண்டு களில், புதிதாக ஒரு அரசுக் கல்லூரியைக் கூட இவர்கள் திறக்கவில்லை.இந்நிலையில், போதிய இடங்கள் இல்லை என்று கூறி, பின்தங்கிய ஏழைக் குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பைப் பறிக்கும் விதமாக, கட்-ஆப் மதிப்பெண் களை டில்லி பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்து வந்தவர்களும், உழைக்கும் வர்க்கத்துக் குடும்பங்களைச் சேர்ந்த  மாணவர்களும் உயர் கல்வியைப் பெற்றுவிடக் கூடாது என்பதற்கான திட்ட மிட்ட சதியே இது என்று இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் குற்றம் சாட்டியுள் ளன. டில்லியில் தனியார் பள்ளிகளில், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்கீழ் படிக்கும் மாண வர்களுக்கு மதிப்பெண்கள் அள்ளிக் கொடுக்கப்படுவதாக வும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேண்டா வெறுப்பாகவே மதிப் பெண்கள் அளிக்கப்படு வதாகவும் ஏற்கெனவே புகார் கள் உள்ளன.

அந்த வகையில், கட்-ஆப் நிர்ணயிப்பது, தனியார் மற்றும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கே சாதகமாக முடிகிறதுஎன்று குற்றம் சாட்டியுள்ள இந்திய மாணவர் சங்கம், பல்கலைக் கழக சமூக- பொருளாதார ரீதி யாக பின்தங்கிய மாணவர் களுக்கு தனி ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும்; கூடுதல் அரசுக்கல்லூரிகளை விரைந்து திறப்பதுடன், இருக்கும் கல் லூரிகளில் ஷிப்ட் முறையில் மாலைநேரக் கல்லூரிகளைத் துவங்க வேண்டும்; கட்-ஆப்பை ரத்துசெய்து விட்டு, நுழைவுத்தேர்வு அடிப்படை யில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது. டில்லியைச் சுற்றியுள்ள புலம்பெயர்ந்தோர் காலனிகள், குடிசைப்பகுதிகள் மற்றும் முறைசாராக் காலனிகளில் வசிக்கும் மாணவர்கள்தான் உயர்கல்வி பெறப்படுவதிலி ருந்து திட்டமிட்ட முறையில் ஒதுக்கப்பட்டு வருவதாகவும், எனவே, அவர்களைத் திரட்டி, மேலும் ஒரு வலுவான போராட் டத்தை நடத்தப்போவதாகவும் இந்தியஜனநாயக வாலிபர் சங்கத்தின் டில்லி மாநிலச் செயலாளர் அமன் சைனி அறிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner