எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 21- இந்தியாவில் 2000 முதல் 2015ஆம் ஆண்டு வரை தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்கொலை செய்து கொள்பவர் களில் அதிகமானவர்கள் 30 முதல் 45 வயதிற்கு உட்பட்ட வர்கள். இவர்களைத் தொடர்ந்து 18 வயது முதல் 30 வயதிற்குட் பட்டவர்களே அதிகம் தற் கொலை செய்து கொள்கிறார்கள் என தேசிய சுகாதாரம் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டில் 1,08,593 ஆக இருந்த தற்கொலை எண் ணிக்கை, 2015ஆம் ஆண்டில் 1,33,623 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 30 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள். 14 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் தற்கொலை விகிதம் ஒரு சத வீதமாகவும், 14 முதல் 18 வயது வரையிலான குழந்தை கள் தற்கொலை விகிதம் 6 சதவீதமாகவும் உள்ளது. 45 முதல் 60 வயதிற்கு உட்பட்டவர் களின் தற்கொலை விகிதம் 19 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் தற்கொலை விகிதம் 7.77 சதவீதமாகவும் உள்ளது.

தற்கொலை செய்து கொள் பவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம் என மத்திய அரசின் புள்ளி விபர கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வசிப்பவர் களின் சராசரி வாழ்நாள் 68.35 வருடங்களாக உள்ளது. சமூக கலாச்சார பிரச்சினைகள், பாகு பாடுகள், அதிக சம்பளத்துட னான வேலையில் ஏற்படும் போட்டிகள் ஆகியன பெரும் பாலான இளைஞர்களின் தற் கொலைக்கு காரணமாக இருப் பதாக நிபுணர்கள் தெரிவிக்கின் றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner