எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கூறுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன்

புதுடில்லி, ஜூன் 23 -தனது பதவி விலகலுக்கு தனிப்பட்டயாரும் காரணமல்ல; நாட்டின் பொருளாதார கொள்கைகளே தன்னை வருத்தப்படச் செய்து விட்டது என்று தலைமைப் பொருளாதார ஆலோ சகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார். சொந்தக் காரணங்களுக் காகவே பதவியிலிருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைமைப் பொரு ளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன், ஜூன் 20-ஆம் தேதி அவருடைய பணியிலிருந்து விலகினார். தனது குடும்பத்தின் சொந்தக் காரணங் களுக்காகவே பதவியிலிருந்து விலகு வதாகவும், அமெரிக்கா செல்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அரவிந்த் சுப்பிர மணியன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், உங்களுடைய பதவிக் காலத்தில் உங்களுக்கு இருந்த மிகப்பெரிய வருத்தம் என்றால் நீங்கள் எதைக் குறிப்பிடுவீர்கள்? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஜிஎஸ்டி சட்டத்திருத்தம், முரண்பாடான முதலாளித்துவ நடை முறை, நிலக்கரிக் கோட்பாடுகள், பொதுவான அடிப்படை வருமானம், வங்கி மோசடிகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் வகுத்தல் ஆகியவையே வருத்தமளிப்பதில் முதன்மையாக இருந்தன என்று பதிலளித்துள்ளார்.

நீங்கள் வந்ததற்குப் பிறகு பொரு ளாதார நிலைமைகள் மோசமாகியுள்ளதா அல்லது சிறப்படைந்துள்ளதா? என்ற கேள்விக்கு, நாம் சீர்திருத்தங்களை இழந்துவிட்டோம்; இரட்டை இலக்க வளர்ச்சியை அடைய நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ள அரவிந்த் சுப்பிரமணியன், வேலைவாய்ப்பு நெருக்கடியைப் போக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற மற்றொரு கேள்விக்கு, வேலை வாய்ப்பை உருவாக்க மந்திரக்கோல் எதுவும் இல்லை; வளர்ச்சி, முதலீடு மற்றும் ஏற்றுமதியில் நாம் கவனம் செலுத்தினால் மட்டுமே வேலைவாய்ப்பு உருவாகும்; தொழில்நுட்ப வளங்கள் அதற்கான வாய்ப்புகளை கொண்டிருக் கவே செய்கின்றன என்றும் தெரிவித் துள்ளார்.

பணமதிப்பு நீக்கத் திட்டம் வெற் றியா, தோல்வியா? என்ற கேள்விக்கு மட்டும் அரவிந்த் சுப்பிரமணியன் பதி லளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படு கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner