எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமியர் நுரையீரலை பொருத்திக்கொண்டதால்

இசுலாமியர்கள்மீது பாசம் காட்டுகிறாராம்  சுஸ்மா சுவராஜ்

மிரட்டும் இந்துத்துவா மற்றும் பாஜக பிரமுகர்கள்

புதுடில்லி, ஜூன் 27 ஜாதி மறுப்புத் திருமணம் செய்திருந்த இந்து பெண் ஒருவருக்கு பாஸ்போர்ட் தர மறுத்த விவகாரம் பெரி தான பிறகு சுஸ்மா சுவராஜ் தலையிட்டு அவருக்கு பாஸ்போர்ட் பெற்றுத்தந்தார்.  மேலும் பாஸ்போர்ட் வழங்க மறுத்த விகாஷ் மிஸ்ராவை இடமாற்றம் செய் தார்.  இசுலாமியரைத் திருமணம் செய்த இந்துப்பெண் இந்து மத்திற்கே களங்கத்தை விளைவித்துவிட்டார். அவருக்கு சுஸ்மா சுவராஜ் உதவியது பெருங்குற்றம் என்று கூறிக்கொண்டு சமூகவலைதளத்தில் பாஜகவினரும் இந்துத்துவாதிகளும் சுஸ்மா சுவராஜை நேரடியாகவே திட்டித் தீர்க்கின்றனர்.  இந்துத்துவா அமைப்பினர் மற்றும் பாஜகவினரின் பதிவுகளை சுஸ்மா சுவராஜ்  தனியாக எடுத்து திட்டி யவரின் பெயருட தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அதில் இந்து அமைப்பின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக்கொண்டிருக்கும் இந்திரா பாஜ்பை பெயர்க்கொண்ட ஒருவர்  ஒரு இசுலாமியனை திருமணம் செய்தவளுக்கு நீங்கள் செய்த உதவியைப் பார்த்து நான் வெட்கப்படுகிறேன். இதை நீங்கள் செய்ய வில்லை, உங்கள் உடலில் உள்ள இசுலாமிய நுரையீரல்தான் இதற்குக் காரணம். என்று பதிவிட்டுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சுஷ்மா சுவராஜ் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அந்த நுரையீரல் மூளைச் சாவடைந்த இசுலாமியர் ஒருவரின் நுரையீரல் என்று செய்திகள் வெளியாயிருந்தன. பாஜகவைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்ளும் செல்டன் கோட்டா என்பவர் சுஷ்மா சுவராஜ்  நீங்கள் பாஜகவில் இருக்கத் தகுதியற்றவர், வேண்டுமென்றால் நீங்கள் காங்கிரசில் சேர்ந்துவிடலாம் அல்லது காங்கிரசில் இணைவதற்காக இவ்வாறு செய்கிறீர்களா, காங்கிரசுகாரர்கள்தான் வாக்குவங்கி ஆசை யில்இசுலாமியர்களுக்கு சாதகமாகஇந்துக் களுக்கு எதிராக இருப்பார்கள். இசுலா மியருக்கு ஆதரவாக செயல்படும் உங் களைப் பார்த்து வெட்கப்படுகிறேன். உங் களின் பாகிஸ்தானியர்கள்மீதான பாச மும் இதைத்தான் காட்டுகிறது என்று கூறி யுள்ளார்.

இதேபோல் பலர் தரமற்ற வார்த்தை களையும் பயன்படுத்தி சுஸ்மா சுவராஜை திட்டித் தீர்க்கின்றனர். அந்த வார்த்தை களை மட்டும் மறைத்துவிட்டு தன்னுடைய சமூக வலைதளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner