எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முசுலிம் ஒருவர் கொலை - செய்தியாளர்மீது தாக்குதல்

புதுடில்லி, ஜூலை 3 பிள்ளை பிடிப்பவர்கள் என்று கூறி முசுலிம்களையும் மார்க் சிஸ்ட் கட்சி ஊழியர்களையும் ஆர்எஸ்எஸ் -பாஜகவினரின் தனியார் ராணுவம் தொடர்ந்து கொலை செய்து வருகிறது. கடந்த ஒரு சில தினங்களில் நால்வரை இதுபோல கொன்றுள்ளனர். இதற்கெதிராக நாடு முழுவதும் உள்ள கட்சிக் கிளைகளை கண்டனம் முழங் குமாறு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி யின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பிள்ளை பிடிப்பவர்கள் என்ற பெயரில் திரிபுராவில் ஆர்எஸ்எஸ்/பாஜக குண்டர்கள் கட்ட விழ்த்து விட்டுள்ள கொலை பாதகத் தாக்குதல் களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண் டனம் தெரிவித்துக் கொள்கிறது.

ஜூன் 26 அன்று மேற்கு திரிபுரா மாவட்டத்தில் 11 வயது சிறுவன் ஒருவன் மிகவும் கொடூரமான முறை யில் கொல்லப்பட்டிருக்கிறான். திரிபுரா மாநில அமைச்சர் ஒருவர், இந்தக்குழந்தையின் சிறுநீரகங்கள் இரண்டும் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டு விற்கப்பட்டதாக வதந்தியைப் பரப்பியதன் காரணமாக மக்கள் மத்தியில் பயமும் பீதியும் உருவாகியிருக்கிறது. எனினும், மாநிலக் காவல் துறைத் தலைவர், அந்த சிறு வனின் உடலை உடற்கூராய்வு சான்றிதழை ஆய்வு செய்தபின், அவனுடைய இரு சிறு நீரகங்களும் உடலில் காணப் படுவதாகக் கூறியிருக்கிறார். ஜூன் 28 அன்று, கடந்த பத்தாண்டுகளாக தெருவில் பொருள்களைக் கூவிவிற்கும் மூன்று முசுலிம்களைப் பார்த்து, பிள்ளை பிடிப்பவர்கள் என்று அபாண்டமாகப் பழி போட்டு, அவர்களைத் தாக்கி யிருக்கிறார்கள். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல் லப்பட்டிருக்கிறார். மற்ற இரு வரும் பலத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டிருக் கிறார்கள்.

பின்னர், மாநிலத்தில் வன் முறையைத் தூண்டிவிடுவதாக மார்க்சிஸ்ட்டுகள் மீதும் குறி வைத்து, வன்முறை வெறியாட் டங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். மார்க் சிஸ்ட் கட்சி ஊழியர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங் களைத் தாக்கி இருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாளேட்டின் செய்தியாளரையும் தாக்கியுள்ளனர். அவர் பலத்தக் காயங் களுடன் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் -பாஜகவினரின் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக இதுவரை நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். தாங் கள் கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறை வெறியாட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக பாஜக மாநில அரசாங்கம், மாநிலத் தில் இணைய தளம் மற்றும் சமூகவலைத் தளங்களை 48 மணி நேரத்திற்கு முடக்கி வைத்திருக்கிறது.

இவர்களின் தாக்குதல்கள் மேலும் விரிவாக்கப்படக்கூடும் என்ற சந்தேகங்கள் எழுந்துள் ளன. சட்டம்- ஒழுங்கை உயர்த் திப்பிடிக்க வேண்டியதும், அப்பாவி மக்களைப் பாதுகாப் பதும், அவர்கள் மீது வன் முறையை ஏவுகின்ற கயவர் களைக் கைது செய்து, தண்டிப் பதும் ஒரு மாநில அரசின் அரசமைப்புச்சட்டக் கடமையா கும். ஆனால், அதற்குப் பதி லாக, இவ்வாறு வன்முறையில் ஈடுபடும் தனியார் ராணுவத் தினருக்கு பாஜக மாநில அரசாங்கம் ஆதரவை அளித்துக் கொண்டிருக்கிறது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் அரசியல்தலைமைக்குழு கடுமையாகக் கண்டிப்பதுடன், நாட்டிலுள்ள அனைத்துக் கட்சி கிளைகளும் ஆர்எஸ்எஸ்-பாஜகவினரின் அபாயகரமான இத்தகைய சூழ்ச்சிகளை வெளிச் சத்திற்குக் கொண்டுவந்திட வேண்டும் என்றும் இவற் றுக்கு எதிராக கண்டனம் முழங் குமாறும் கேட்டுக் கொள் கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner