எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரயில்வே துறை வல்லுநர் சிறீதரன் கருத்து

புதுடில்லி, ஜூலை 4- புல்லட் ரயில்கள் பணக்காரர் களுக்கே பயன்படும்; ஏழை களால் அதில் பயணம் செய்ய முடியாது என்று, ஓய்வுபெற்ற ரயில்வே பொறியாளரும், ரயில்வே துறை வல்லுநருமான சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவிற்குத் தேவை, பாதுகாப்பான மற்றும் ஏழைகளும் பயணிக்கக் கூடிய ரயில்களே என்றும் அவர் கூறியுள்ளார்.

மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் 40 விழுக்காடு இடங்கள் காலியாக இருக்கின்றன; ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் இன்னும் இருக்கின்றன; ரயில் விபத்துக்கள் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேரை பலி வாங் குகின்றன.

ஆனால், இவற்றில் அக்கறை செலுத்தாத ரயில்வே துறையும், மத்திய பாஜக அரசும் புல்லட் ரயில்களில் ஆர்வம் காட்டி வருகின்றன. அகமதாபாத் - மும்பை இடையே ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் புல்லட் ரயில் திட்டத்தை அறிவித்த மோடி, படாடோபமான முறையில் ஜப்பான் பிரத மரையே நேரில் வரச்செய்து, திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி னார். ஆனால், இந்ததிட்டத் திற்காக விவசாயிகள், பழங் குடிகளை அவர் களின் நிலத்திலிருந்து வெளியேற்ற நடக் கும் முயற்சி கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக் கிறது.

இந்நிலையில் ரயில்வே துறை வல்லுநர் சிறீதரன், இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதா வது: பயோ டாய்லெட்கள் அமைத்ததைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் நமதுரயில்வே துறையில் ஏற்பட வில்லை.

ரயில்களின் வேகமும் கூட்டப்படவில்லை. கவுரவத் திற்குரிய ரயில்களாக கருதப் படும் ரயில்களின் சராசரி வேகம்கூடக் குறைந்துவிட்டது. நேரம் தவறாமையும் கடைப் பிடிக்கப்படுவதில்லை. தாமத மாக வருவது சாதாரணமாகி விட்டது. ரயில்களின் விபத்து களைக் குறைக்கவும் இல்லை. பலர் ரயில் பாதைகளைக் கடக்கும்போது உயிரிழப்பது தொடர் கிறது. ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் ரயில் விபத்துக் களினால் இறக்கின்றனர். எனவே இந்திய ரயில்வே துறையானது மற்ற முன்னேறிய நாடுகளை விட 20 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது என்பதே என் கருத்து.இந்த சூழலில், நாட்டுக்குத் தேவை பாது காப்பானதும் நவீனமானதும் நேரத்தில் செல்லக்கூடியதுமான ரயில் கள்தானே தவிர, புல்லட் ரயில்கள் அல்ல.புல்லட் ரயில்கள் வசதி படைத்தவர்களுக்கே சாத்தியமாகும்.

அதில் பயணம் செய்வதற்கு அதிகமாகச் செலவழிக்க வேண்டியிருக்கும். இந்த ரயில்களில்சாதாரண மக்கள் பயணம் செல்ல முடியாது. இவ்வாறு சிறீதரன் கூறியுள் ளார். சிறீதரன், இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கொங்கண் ரயில்வே மற்றும் டில்லி மெட்ரோ ரயில்வே அமைப் பதில் முக்கியப் பங்காற்றியவர்.

பெருநகரங்களின் மெட்ரோ ரயில் சேவைக்கும் இப்போது வரை ஆலோசகராக இருந்து வருபவர்.

இவர் காலத்தில் தான், இந்திய ரயில்வேயில் பயோ டாய்லெட் அமைக்கும் பணி கள் ஊக்குவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner