எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி,  ஜூலை 4  மக்களவையில் எம்.பி.க்கள் இனி ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 5 கேள்விகள் வரையே கேட்பதற்கு அனுமதிக் கப்படுவர் என்றும், இந்த புதிய கட்டுப்பாடு எதிர்வரும் மழைக்கால கூட்டத் தொடர் முதல் அமலுக்கு வரும் என்றும் மக்களவை தலைமைச் செயலர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இதுவரை எம்.பி.க்கள் ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 10 கேள்விகள் வரை கேட்பதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். மக்களவைத் தலைவர் ஏற்கெனவே பிறப்பித்திருந்த உத்தரவின் அடிப்படையில் இந்த கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கேள்விகளின் எண்ணிக்கையை 5-ஆக குறைக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள உத்தரவில் திருத்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்களவை தலைமைச் செயலர் ஸ்நேகலதா சிறீவஸ்தவா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மக்களவையில் எம்.பி.க்கள் ஒரு நாளுக்கு கேட்கக் கூடிய அதிகபட்ச கேள்விகளின் எண்ணிக்கை 10-இல் இருந்து 5 -ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு எம்.பி. 5 கேள்விகளுக்கு மேல் கேட்பதற்கு அறிவிக்கை அளித்தால், கூடுதல் கேள்விகளை எழுப்புவதற்கு அடுத்த நாள்தான் அனுமதிக்கப்படுவார். மக்களவைத் தலைவரின் இந்த புதிய உத்தரவு, எதிர்வரும் மழைக்கால கூட்டத் தொடர் முதல் அமல்படுத்தப்படும் என்று அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner