எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 4 டில்லியில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. மத்திய அரசுக்கா, துணைநிலை ஆளுநருக்கா அல்லது முதல்வருக்கா என்ற வழக்கில் உச்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலை மையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

டில்லியில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் என டில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இவ்வழக்கை தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, தீர்ப்பளித்துள்ளது. இதில், அரசியல் சாசனத்தை மதிக்கும் படியே நிர்வாகங்களின் செயல்பாடு இருக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள் மீது துணைநிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். மக்கள் நல திட்டங்கள் துணைநிலை ஆளுநரால் தாமதமானாலும், அரசால் தாமதமானாலும் இரு வருமே பொறுப்பாவர். மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவதே சாலச்சிறந்தது. எல்லா முடிவுகளுக்கும் அமைச்சரவை துணைநிலை ஆளுநரின் ஒப்புதலை பெற வேண்டிய அவசிய மில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner