எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 8  பாஜ கவை வீழ்த்த காங்கிரசுடன் கூட்டணி சேருவதில் எந்தத் தயக் கமும் இல்லை என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

பாஜக அராஜகம் செய்வ தோடு, மக்களை துன்புறுத்துகிறது. பாஜகவைச் சேர்ந்த சிலரே அந்தக் கட்சியை ஆதரிப்பதில்லை. அக்கட்சி, நூறு ஹிட்லர்கள் சேர்ந் தார் போல் செயல்படுகிறது. அக் கட்சியை வீழ்த்த காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதில் எந்தத் தயக்கமும் இல்லை.

காங்கிரசு தலைமையைப் பொருத்த வரையில், ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. அக்கட்சியின் தற்போதைய தலைவரான ராகுல் காந்தி இளையவர் என்பதால் அவர் குறித்து என்னால் ஏதும் கூற இயலாது. கூட்டாட்சி முன்னணியைப் பொருத்த வரையில் அது எனது தனிப்பட்ட முடிவாக இருக்காது. அது, மாநிலக் கட்சிகள் அனைத்தின் முடிவாகவும் இருக்க வேண்டும். சில மாநில கட்சிகள், தங்களுக்கு மாநிலத்தில் இருக்கும் நெருக்கடி காரணமாக காங்கிரசுக்கு ஆதரவளிக்காமல் இருக்கலாம்.

அவர்கள் மீது நான் குற்றம் சுமத்தவில்லை. மாறாக, பாஜக வுக்கு எதிராக இணைந்து பணி யாற்றுவோம் என்றுதான் கூறுகிறேன். ஒரு சில இடங்களில் காங்கிரசு கட்சிக்கு பலம் இருந்து, அக்கட்சி அதிக இடங்களை வென்றால் அதற்கு முன்னுரிமை அளிப்போம் என்று கூறுகிறேன். அதேபோல், சில இடங்களில் மாநில கட்சிகள் ஒன்றிணைந்து, முடிவெடுக்கும் அதிகாரம் படைத்ததாக இருக்கலாம்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மாபெரும் கூட் டணி ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. 75 தொகுதிகளில் பொது வேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு சாதகமாக மாறும்.

அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்படும் பட்சத்தில் பாஜக வின் ஆட்டம் முடிவுக்கு வந்து விடும். தேர்தல் முடிந்த பிறகு ஒரு குறைந்தபட்ச கொள்கையை உருவாக்கிக் கொள்ளலாம். அது, ஒரு பெரிய குடும்பத்தின் கூட்டு முடிவாக இருக்கும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner