எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 8  மத்திய அரசால் 4 ஆண்டுகளில் நாடு பேரழிவைச் சந்தித்துள்ளதாக அ.இ.பா.பி.கட்சி தேசிய பொதுச்செயலாளர் தேவவிரத பிஸ்வாஸ் குற்றம்சாட்டினார். விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சனிக் கிழமை (7.7.2018) நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேவவிரத பிஸ்வாஸ், பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியது: வரும் டிசம்பரில் கொல்கத் தாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான மாநாடு குறித்து ஆலோசனை நடை பெற்றது. கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு மூலம் நாடு மிகப்பெரிய பேரழிவை சந்தித் துள்ளது. அம்பானி, அதானி, மல்லையா போன்ற கார்ப் பரேட் நிறுவனங்களால் வங் கித்துறை மிகவும் நலிவடைந் துள்ளது.

ரூ. 3 லட்சம் கோடி கார்ப் பரேட் நிறுவனங்களால் வங் கித்துறைக்கு இழப்பு ஏற்பட் டுள்ளது. இதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. பண மதிப் பிழப்பு திட்டம் தோல்விய டைந்து விட்டது என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner