எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 12 -பாஜக ஆட்சி செய்யும் 11 மாநிலங்கள், பள்ளி மாணவ - மாணவியர்க்கான சத்துணவில் முட்டையை புறக் கணிப்பது தெரிய வந்துள்ளது.இதுதொடர்பாக, தேசிய சத்து ணவு மய்யத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கு முக்கியமான புரதச் சத்துணவாக, முட்டையை தேசிய சத்துணவு மய்யம் பரிந்துரைத்துள்ளது. குழந்தைகளுக்கான மதிய உணவில் கட்டாயமாக முட்டையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பால் மற்றும் வாழைப்பழங்களைக் கொள்முதல் செய்வதைவிட பள்ளிகளுக்குத் தேவை யான முட்டைகளை வாங்குவது எளிமையானதும் மலிவானதும் ஆகும்.

ஆனால், இவ்வாறு பரிந்து ரைகள் அளிக்கப்பட்டிருந்தாலும் பாஜக ஆட்சி நடைபெறுகிற மாநிலங்களில் இது நடை முறைப்படுத்தப்படவில்லை.பாஜக ஆட்சி செய்யும், இமாச் சலப்பிர தேசம், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, சத்தீஸ்கர், அருணாசலப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய 11 மாநிலங்களில் பள்ளி மாணவர் களுக்கு முட்டை வழங்கப்படு வதில்லை  என கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner