எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய்

புதுடில்லி, ஜூலை 16 சாமானிய மக்களுக்கும் பயன்படும் வகையில் நீதித் துறை செயல்பட வேண்டும் என்றால், இத்துறையில் சீர் திருத்தங்கள் தேவையில்லை; புரட்சிதான் தேவை என்று உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித் துள்ளார்.

இப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக் டோபர் 2-இல் ஓய்வு பெற இருக்கிறார். அதன் பிறகு ரஞ்சன் கோகோய் அப்பொ றுப்பை ஏற்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டில்லியில் வியாழக் கிழமை நடைபெற்ற ராம்நாத் கோயங்கா நினைவு மூன்றாவது ஆண்டு சொற் பொழிவு நிகழ்ச்சியில் நீதித் துறையின் சீரிய நோக்கங்கள்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:

நமது நாட்டு மக்களின் கடைசி மற்றும் ஆதார நம் பிக்கையாக நீதித்துறை உள் ளது. அரசமைப்புச் சட்டத்தின் நோக் கங்களை முன்னின்று பாதுகாக்கும் காவ லனாக நீதித்துறை செயல்பட்டு வரு கிறது. சமுதாயத்தின் ஒட்டு மொத்த நம்பிக்கையாக நீதித் துறை உள்ளது. சுந்திரமாக செயல்படும் நீதிபதிகளும், உரத்த குரல் எழுப்பும் பத்தி ரிகையாளர்களும்தான் ஜன நாயகத்தின் முதல் கட்ட காவலர்கள் என்று 'இண் டியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அதே நேரத்தில் உரத்த குரல் எழுப்பும் நீதிபதி களும், சுதந்திரமாக செயல் படும் பத்திரிகையாளர்களும் தேவை என்பது எனது கருத்து.

நாடு சுந்திரமடைந்த முதல் 50 ஆண்டுகளில் நீதி மன்றங்கள் உறுதியான தீர்ப் புகளை வழங்கின. ஆனால், இப்போது நாங்கள் கட்டுண் டுள்ளோம். நாட்டுக்காக வும், சாமானிய மனிதர்களுக்காக வும் பெரிதும் பயன்படும் வகையில் நீதித்துறை செயல் பட சீர்திருத்தங்கள் தேவையில்லை; இத்துறையில் மிகப் பெரிய புரட்சியே தேவைப் படுகிறது. நீதித்துறை இப் போது உளியில்லாத சிற் பியைப் போல உள்ளது. நாம் கூற வேண்டிதெல்லாம் கூறியாகி விட்டது; ஆனால் யாரும் கேட்பதாக இல்லை. நாம் மீண்டும் அனைத்தையும் கூற வேண்டியதுதான்' என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் வாசகத்தைதான் இப்போது கடைப்பிடிக்க வேண்டி யுள்ளது. மிகவும் தாமதமான செயல்பாடுகள்; செயல்திறன் குறைவு ஆகியவை நீதித்துறை யின் நீண்ட கால சவால்களாக உள்ளன. நீதி வழங்குதல் என்பது சமுதாயதத்தில் நல்ல விளைவு களையும், சிறந்த மாற்றங்களையும் உரு  வாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner