எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் திட்டம்

புதுடில்லி, ஜூலை 19 நாட்டில் குழந்தை திருமணங் களை செல்லாததாக அறிவிக் கும் வகையில் சட்டத் திருத் தத்தை மேற்கொள்ள வலியு றுத்தி, மத்திய அமைச்சரவை யை அணுக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட் டுள்ளது.

இந்தியாவில் பெண்ணுக் கான சட்டப்பூர்வ திருமண வயது 18 ஆகவும், ஆணுக்கான திருமண வயது 21-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயதை எட்டுவதற்கு முன்பே நடைபெறும் திருமணங்கள் குழந்தை திருமணங்களாக வரையறுக்கப்படுகின்றன.

இதுபோன்ற திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு, குழந்தை திருமணத் தடைச் சட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனால், திருமணம் நடை பெற்று முடிந்துவிட்டால், சம் பந்தப்பட்ட இருவரும் விரும் பும்பட்சத்தில் திருமணத்தை செல்லத்தக்கதாக அங்கீகரிப் பதற்கு மேற்கண்ட சட்டத்தின் 3-ஆவது பிரிவு அனுமதிக்கிறது. இருவரில் ஒருவர் நீதிமன் றத்தை அணுகினால் மட்டுமே திருமணத்தை ரத்து செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில், ஒட்டு மொத்தமாக குழந்தை திரு மணங்களை செல்லாததாக அறிவிக்கும் வகையில், குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் 3-ஆவது பிரிவில் உரிய திருத்தத்தை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய அமைச் சரவை அணுக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது.

 

இதுதொடர்பான முன் மொழிவு, மத்திய அமைச்சர வையின் கவனத்துக்கு விரை வில் அனுப்பப்படும் என்று அந்த அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 2015- - 2016ஆம் ஆண்டைய தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, நாட்டில் 26 சதவீத பெண்களுக்கு உரிய வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. மேலும், 15 வயது முதல் 19 வயதுடைய சிறுமிகளில் 8 சதவீதம் பேர் தாயாக இருப் பதும் தெரியவந்தது.

நாட்டில் சிறுமிகள் திரு மணம் அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அதிருப்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner