எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 21 -கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்க அதி கரிப்பால் இந்தியப் பொருளாதாரம் மேலும் சீர்கெடலாம் என்று இந்திய பெருமுதலாளிகளில் ஒருவரான பிர்லா எச்சரித்துள்ளார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு, கச்சா எண்ணெய் விலைஉயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவற்றால் இந்தியப் பொருளாதாரம் அடுத்தடுத்து சிக்கலில் மாட்டித் தவித்து வருகிறது. இந்நிலையில், தனது சிமெண்ட் நிறுவனத்தின் ஆண்டுக் கூட் டத்தில் பேசியுள்ள குமார் மங்கலம் பிர்லா, இந்தியப் பொருளாதாரம் மேலும் சீர்கெடலாம் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் பேசி யிருப்பதாவது:

பணமதிப்புநீக்கம்,ஜிஎஸ்டிஅம லாக்கத்திற்குப் பின்பு, இந்தியப்பொரு ளாதாரம் உயரும் என்று கூறப்பட்டது. ஆனால்,அது நடைபெறவில்லை. தற் போது உள்கட்டமைப்புத் திட்டங்களான பாரத் மாலாநெடுஞ்சாலைத் திட்டங்கள், புதிய மெட்ரோக்கள், புதிய விமான நிலையங்கள், மலிவுவிலை வீடுகள், ஸ்மார்ட் நகரங்கள் எனபல திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இவையெல்லாம் குறுகிய கால மாறு தல்களை மட்டுமே அளிக்கக் கூடியவை ஆகும். பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வேறு சில அம்சங்கள் உள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, பண வீக்கம் அதிகரிப்பு, தொழிற்சாலை உற்பத்திக்குறைவு போன்றவைதான் அவை. இவற்றால், இந்திய பொருளா தாரம் மேலும் சீர்கெடும் ஆபத்தே இருக்கிறது. இவ்வாறு பிர்லா கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner