எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 23 இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை நிறுவனத்தில் 27 செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் இரு தனியார் நிறு வனங்கள், ஒரு பொதுத்துறை நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.அதற்கு அடுத்த நாளிலேயே அறிவியலாளர் தபன் மிஸ்ரா பணியிடமாற்றம் செய்யப் பட்டார்.

இஸ்ரோவின் அகமதாபாத் விண்வெளிஆய்வுமய்யத்தின் இயக்குநர் பணியிலிருந்து தபன்மிஸ்ரா விடுவிக்கப்பட்டு, இஸ்ரோவின் தலைமைய கத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தலைமை யகத்தில் இஸ்ரோ தலைவருக்கு ஆலோசனை கூறும் மூத்த ஆலோசகராக செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இருள் மற்றும் பனிமிகுந்த பகுதிகளிலும் தெளிவாக படம் பிடிக்கும் ஆற்றல் மிக்க ‘ரிசாட் 1’ உள்பட ஏராளமான செயற்கைக்கோள்களை உருவாக் கும் பணிகளில் தபன் மிஸ்ரா பங்களிப்பை வழங்கியவர்.

அகமதாபாத் அலுவலகத் தில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் தபன் மிஸ்ரா சக ஊழியர்களிடையேபேசுகையில்,

“இஸ்ரோவைவிடமேலானது என்று எதுவும்எனக்கு கிடையாது.தொடர்ந்துஇஸ் ரோவில் பணியைத் தொடர் வேன். இஸ்ரோவால்தான் நான் இந்த நிலையை எட்டி யுள்ளேன்’’ என்று கூறியுள்ளார்.

இஸ்ரோவில், தனியார்மய முயற்சிக்கு எதிராக மாறுபட்ட கருத்துகளை தபன்மிஸ்ரா கொண்டிருந்தார். பிரெஞ்ச் கயானாவில் கடந்த ஏப்ரலில் ஏவப்பட இருந்த ஜிசாட் 11 கால தாமதம் ஆவதுகுறித்து கவலை வெளியிட்டு வந்தார்.

கடந்த மார்ச் மாதத்தில் ஏவப்பட்ட உடனேயே ஜிசாட் 6 ஏ செயற்கைக்கோளுடன் தொடர்பு இணைப்பை இழந்த நிலையில் இஸ்ரோ பெரும் பின்னடைவுடன் பாதிப்புக்குள் ளானது.

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத் தில் கல்வி பயின்றவர் தபன் மிஸ்ரா (வயது 57), பணிச்சுமை காரணமாகமூளையில்புற்று நோய் ஏற்பட்டு, 10 நாள்கள் கோமாநிலையில்இருந்துமீண் டவர்தபன்மிஸ்ரா. மூளைப் புற்றுக்கான சிகிச்சையாக36 முறைகெமோசிகிச்சைஅளிக் கப்பட்டது.மருத்துவமனையிலி ருந்து நான்கு நாட்களுக்குப் பின்னர் திரும்பி, பணியில் சேர்ந்து 10 மணிநேரம் தொடர்ச்சி யாக பணியாற்றியதாக தபன் மிஸ்ரா கூறினார்.

தபன்மிஸ்ரா தலைமையில் அகமதாபாத் எஸ்ஏசியிலிருந்து ஏவப்பட்ட ரிசாட், கார்ட் டோசாட் போன்ற செயற்கைக் கோள்கள் இயங்கிவருகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner