எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடில்லி, ஜூலை 24  தேர்தல் செலவினக் கட்டுப் பாடுகளில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களுக்கு சாதகமான வகையில் சில சட்டப் பிரிவுகள் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி ஹரி ஷங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு அந்த மனுவை விசாரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தேர்தல்களில் குறிப்பிட்ட வேட்பாளர், எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. விளம்பரங்கள், பிர சாரங்கள், பொதுக் கூட்டங்கள் என அனைத்துக்கும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கட்டுப்பாடு களானது அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் ஒருமித்து இல்லாமல் முரண்பட்டிருப்ப தாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குரைஞர் அமித் சாஹ்னி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது:

பொதுவாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 77-இல், பிரச்சாரங்களுக்கான செலவின வரம்பு வரையறுக்கப் பட்டுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும் அனைத்து செலவுகளும் அந்த வரம்புக்குள் வருகின்றன.

அதேவேளையில், குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக முக்கியத் தலைவர்கள் மேற்கொள்ளும் பொது பிரச்சாரங் களின் செலவு சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இது முரண்பாடான விஷயம். இத்தகைய பாகுபாடுகள் களையப்பட வேண்டும். இதற்கு வழி வகுக்கும் 77-ஆவது சட்டப் பிரிவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner