எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாநிலங்களவையில் தகவல்

புதுடில்லி, ஜூலை 26 -இந்திய வங்கிகளின் மொத்த வாராக் கடன்களில் 90 சதவிகிதத்தை வாரிச் சுருட்டியவர்கள் வெறும் 4 ஆயிரத்து 387 பேர்தான் என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, நாட்டிலுள்ள வங்கிகளின் மொத்த வாராக் கடன் ரூ. 9 லட்சம் கோடி என்ற நிலையில், இந்த 4 ஆயிரத்து 387 பேர் மட்டும் 8 லட்சத்து59 ஆயிரத்து 532 கோடி ரூபாயை சுருட்டியுள்ளனர். வாராக்கடன்கள் தொடர்பாக, ஜூலை 24- ஆம் தேதி மாநிலங் களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சரான ஷிவ் பிர தாப் சுக்லா எழுத்துப்பூர்வ பதிலை அளித்துள்ளார்.

அதில் இந்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.2014-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் வெறும் ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் கோடியாக மட்டுமே இருந்தது. ஆனால், 2018 மார்ச் மாத நிறைவில் இந்திய வங்கித் துறையின் மொத்த வாராக் கடன் அளவு ரூ. 9 லட்சத்து 62 ஆயிரம் கோடியாக உள்ளது. இதில் ரூ. 10 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் கடன் பெற்றவர்கள் என்று பார்த்தால் அவர்கள் சுமார்4 ஆயிரத்து 387 பேர்தான். இவர்கள் ஒட்டுமொத்த வாராக் கடன்களில் 90 சதவிகிதத்தைக் கொண்டுள்ளனர். இவர்களின் மொத்த கடன் ரூ. 8 லட்சத்து 59 ஆயிரத்து 532 கோடியாக உள்ளது என்று ஷிவ் பிரதாப் சுக்லாதெரிவித்துள்ளார்.எனினும், ரூ.10 கோடிக்கு மேல் கடன் பெற்றுபாக்கி வைத்துள்ள அந்த கடனாளிகள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க முடி யாது என்றும், ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, 45(இ) பிரிவானது வங்கிகளால் சமர்ப்பிக்கப்பட்ட கடன் விவரங்களை வெளியிடத் தடைவிதிப்பதாகவும் அவர் மழுப்பியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner