புதுடில்லி, ஜூலை 30- நீதிமன்றங் களில் ஓர் உத்தரவு பிறப்பிக்கப் படும்போது, எதற்காக அத்த கைய முடிவு எடுக்கப்பட்டது? அதற்கான காரணங்கள் எவை? என்பன போன்ற தகவல்கள் அந்த தீர்ப்பில் இடம்பெற்றி ருப்பது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெறும் உத்தரவை மட்டும் வெளியிட்டால், அது குறித்த புரிதல் சம்பந்தப்பட்ட மனுதா ரருக்கும், வழக்கில் தொடர்பு டைய எதிர் தரப்பினருக்கும் இருக்காது என்றும் கூறியுள் ளது. இந்தூர் காம்போஸிட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய வாரியக் குழு, கடந்த 2008-இல் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.
வருங்கால வைப்பு நிதியை அந்நிறுவனம் சரியாகச் செலுத்த வில்லை என்று கூறி வைப்புத் தொகையும், அபராதமும் செலுத் துமாறு அந்நிறுவனத்துக்கு வாரி யக் குழு உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து தொழிலாளர் வைப்பு நிதி தீர்ப்பாயத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் முறை யிட்டது. அதை விசாரித்த தீர்ப் பாயம், வாரியக் குழு பிறப் பித்த உத்தரவை ரத்து செய்தது.
இந்நிலையில், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வாரியக் குழு மேல்முறையீடு செய்தபோது, அதை நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர். அதுதொடர் பாக பிறப்பிக்கப்பட்ட உத்தர வில் எதற்காக அந்த மனு நிரா கரிக்கப்பட்டது? என்பது தொடர் பான விவரங்கள் இல்லை. இந்நிலையில் இந்த விவகாரம், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.சாப்ரே, நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறி யதாவது: நீதிமன்றம் பிறப்பிக் கும் உத்தரவில், வழக்கின் விவ ரம், மனுதாரரின் கோரிக்கைகள், வாத, பிரதிவாதங்கள், அதன் அடிப்படையில் கண்டறியப் பட்ட உண்மைகள், தீர்ப்பை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் உள்ளிட்டவை அவசியம் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மீண் டும் இதை விசாரணைக்குட்ப டுத்துமாறு அறிவுறுத்துகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.