எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 31 எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு, பொறியியல் படிக்க அடுத்ததாக வரப்போகும் தேர்வு ஆகியவற்றை நடத்த தேசிய நுழைவுத்தேர்வு மய்யத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு  மக்களவையில் அதிமுக, கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று அவையில் இந்த பிரச்சினையை எழுப்பினார். அவர் பேசும் போது, தேசிய தேர்வு அமைப்பு மூலம் இனிமேல் ஆண்டுக்கு இரண்டு முறை மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பிளஸ் 2  படிப்பதை விட நுழைவுத்தேர்வில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  ஏற்கெனவே கிராமப்புறங்களில் மருத்துவர்கள் தட்டுப்பாடு உள்ளது. எனவே தமிழகம் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று  பேசினார். அவரது பேச்சுக்கு ஆதரவாக அதிமுக எம்பிக்கள் மேஜை தட்டினர். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதற்கு பதில் அளித்து பேசியதாவது: தேசிய தேர்வு அமைப்பு மூலம் நடத்தப்படும் தேர்வு, ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது. ஆனால் கணினி  அடிப்படையில்தான் தேர்வு நடக்கும். ஏற்கெனவே கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேள்வி மற்றும் விடைத்தாளுக்கு மாணவர்கள் மவுசை பயன்படுத்தி பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner