எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 31 பன்னி ரெண்டு வயதுக்கு உள்பட்ட சிறு மிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா- 2018 மக்களவை யில் திங்கள்கிழமை நிறைவேறியது.

ஜம்மு -காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 12 வயது சிறுமி யும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவங்கள் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி குற்றவியல் சட்ட (திருத்த) அவசரச் சட்டம் கொண்டு வரப் பட்டிருந்தது. அந்தச் சட்டத்துக்கு மாற்றாக, மக்களவையில் தற் போது இந்த குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா -2018 கொண்டு வரப் பட்டது.

இந்நிலையில், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. மசோதாவுக்கு, அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைத்துக் கட்சிகளும் ஆதர வளித்தன.

முன்னதாக, மசோதா மீதான 2 மணி நேர விவாதத்தை அடுத்து, கேள்விகளுக்குப் பதிலளித்து மத்திய உள்துறை இணைய மைச்சர் கிரண் ரிஜிஜு பேசிய தாவது:

சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கோடு இதுபோன்று கடுமையான சட் டங்கள் கொண்டுவரப்படுகின் றன. இந்திய தண்டனையியல் சட்டத்தின் முந்தைய பிரிவுகளில், பெண்களை பாலியல் வன் கொடுமை செய்பவர்களுக்கே தண்டனைகள் இருந்தது. ஆனால், 12 அல்லது 16 வய துக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை, கூட்டு வன்கொடுமை செய்யும் குற்ற வாளிகளுக்கான தண்டனை விதிகள் இருந்ததில்லை. அந்த வகையில் தற்போது அரசு கொண்டு வந்துள்ளது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சட்ட விதிகளாகும்.

நாட்டில் சமீபத்தில் 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய் யப்பட்ட சம்பவங்கள் மக்களின் மனதை உலுக்கின. இதையடுத்து 12 - 16 வயதுக்குள்பட்ட சிறுமி களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை, கூட்டு வன் கொடுமை சம்பவங்களைத் தடுக்க மிகக் கடுமையான தண்ட னைகளுடன் கூடிய சட்ட விதிகளை உருவாக்க தேவையேற் பட்டது.

அந்த வகையில் இந்தச் சட்ட மசோதா, 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் பாலியல் வன் கொடுமை வழக்கில் குற்றவாளி களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வகை செய்கிறது.

ஒரு பெண் பாலியல் வன் கொடுமை செய்யப்படும் வழக் கில், குறைந்தபட்ச தண்டனைக் காலம் 7 ஆண்டு சிறையில் இருந்து, 10 ஆண்டு சிறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சிறைத் தண்டனையை ஆயுள் சிறையாக நீட்டிக்கவும் இயலும் என்று கிரண் ரிஜிஜு பேசினார்.

மக்களவையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குற்ற வியல் சட்ட (திருத்த) மசோதா-2018-இன் படி, 12 வயதுக்கு உள் பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். குறைந்த பட்சமாக 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் படலாம். மேலும் அது ஆயுள் சிறையாகவும் நீட்டிக்கப்படலாம்.

16 வயதுக்கு உள்பட்ட சிறு மிகள் பாலியல் வன் கொடுமை வழக்கில், குறைந்த பட்ச தண்ட னையானது 10 ஆண்டு சிறையிலிருந்து, 20 ஆண்டு சிறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத் துடன், அதை ஆயுள் சிறையாக நீட்டிக்கவும் வகை செய்யப்பட் டுள்ளது.

மேலும், இந்த மசோதாவின் மூலமாக பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை விசா ரணை மற்றும் நீதிமன்ற விசா ரணைகளை விரைவுபடுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து வகையான பாலியல் வன்கொடுமை வழக் குகளின் விசாரணை கட்டாயமாக 2 மாதங்களுக்குள்ளாக முடிக் கப்பட வேண்டும்.

அதேபோல், மேல்முறை யீடுகள் மீதான விசாரணை 6 மாதங்களுக்குள்ளாக நிறைவு செய்யப்பட வேண்டும். 16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, கூட்டு வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு முன் பிணை வழங்கப்படாது.

அத்தகைய வன்கொடுமை வழக்குகளில் குற்றம்சாட்டப் பட்ட நபர்களின் பிணை மனுக் கள் மீது உத்தரவிடும் முன்பாக, அதன் மீது பதிலளிக்க அரசுத் தரப்பு வழக்குரைஞர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பிரதிநிதிக்கு நீதிமன்றம் 15 நாள்கள் அவகாசம் வழங்கப்பட வேண் டும் என்று அந்த மசோதாவில் வரையறுக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner