எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 31-  ரயில் பெட்டிகளில் சாப்பாட்டுக்குப் பிறகு குப்பைப் பொருட்களை சேகரிக்க ஊழியர்கள் நேரடி யாக பைகளை கொண்டு பய ணிகளின் இடத்திற்கே வருவார் கள் என்று ரயில்வே வாரியத் தலைவர் கூறியுள்ளார்.

ரயில்வே கோட்ட அளவி லான உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ரயில்வே வாரிய உறுப் பினர்கள் கூட்டம் டில்லியில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி பேசியதாவது:

விமானத்தைபோல, இனி ரயில் பெட்டிகளிலும், சாப் பாட்டுக்குப் பிறகு குப்பைப் பொருட்களை சேகரிக்க  ஊழி யர்கள் தனியாக பைகளைக் கொண்டு வருவார்கள்.

ஒவ்வொரு பயணிகளிடத் திலும்  வந்து நேரடியாக குப் பைகளைக் கேட்டுப் பெற்றுச் செல்வார்கள். பயணிகள் சாப் பிட்ட பின் வைத்திருக்கும் ட்ரே, தட்டுகள் அல்லது எந்த ஒரு உதிரி குப்பைகள் என்றாலும் அவற்றை ஊழியர்கள் சேகரித் துச் செல்வார்கள்.

ஒருவேளை சில ரயில்களில் கேண்டீன் ஊழியர்கள் இருக்க வாய்ப்பில்லை என்றால் அத் தகைய ரயில்களில் துப்புரவு பணியாளர்கள்தான் பைகளை பயணிகளிடம் எடுத்துச் சென்று குப்பைகளை சேகரிக்க வேண் டும். குப்பை சேகரிப்பு பைகள் குறித்த விவகாரமானது இப் போது வழக்கமான கேண்டீன் ஒப்பந்தங்களோடு இணைத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner