எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 31- கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத், அசாம், உத்தர பிர தேசம் ஆகிய 6 மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது.  இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய அவசர மீட்பு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 6 மாநிலங்களில் பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக மகாராஷ்டிராவில் 26 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 22, அசாமில் 21, கேரளாவில் 14, குஜராத்தில் 10 மாவட்டங்களும்   பாதித்துள் ளன. அசாமில் 10.17  லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். மழை வெள்ளத்துக்கு 6 மாநி லங்களில் 537 பேர் பலியாகி உள்ளனர். இதில், அதிகப்பட் சமாக மகாராஷ்டிராவில் 139 பேர் பலியாகி உள்ளனர். கேர ளாவில் 126 பேரும், மேற்கு வங்கத்தில் 116,   உபியில் 70 பேரும் குஜராத்தில் 52, அசாமில் 34 பேரும் பலியாகி உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner