எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூலை 31- நாட்டின் பல்வேறு காப்பீட்டு நிறுவ னங்களில், 15 ஆயிரத்து, 167 கோடி ரூபாய், காப்பீட்டுத் தாரர்களால் உரிமை கோரப் படாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து காப்பீட்டுத் துறை வட்டாரங்கள் கூறியதா வது:

காப்பீட்டுத்தாரர்கள் அனைவருக்கும், குறித்த நேரத்தில் அவர்களின் பணம் திரும்ப அளிக்கப்படு வதை கண்காணிக்கும் பொறுப்பு, காப்பீட்டுத்தாரர் பாதுகாப்பு கமிட்டியிடம் விடப்பட்டு உள்ளது. நுகர் வோர் சேவை தர விதிப்படி, கோரப்படாத காப்பீடுகள் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை, இந்த கமிட்டி கண்காணிக் கிறது.

நாடு முழுவதும், பல் வேறு காப்பீட்டுத் துறை நிறு வனங்களில், 2018, மார்ச், 31 வரை, 15 ஆயிரத்து, 167 கோடி ரூபாய், காப்பீட்டுத் தாரர்களால் உரிமை கோர படாமல் உள்ளது. இதில், 10 ஆயிரத்து, 509 கோடிரூபாய், எல்.அய்.சி., எனப்படும், ஆயுள் காப்பீட்டு கழகத்திடம் உள்ளது.

தனியார் துறையை சேர்ந்த, 22 காப்பீட்டுத் துறை நிறுவனங்களிடம், 4,657 கோடி ரூபாய், உரிமை கோரப்படா மல் உள்ளது. உரிமை கோரப் படாத காப்பீட்டுத் தொகையை, உரியவர்களை கண்டுபிடித்து ஒப்படைக்கும்படி, காப்பீட் டுத்துறை நிறுவனங்களுக்கு, அய்.ஆர்.டி.ஏ.அய்., எனப் படும், காப்பீட்டுத் துறை ஒழுங்குமுறை மற்றும் மேம் பாட்டு ஆணையம் உத்தர விட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner