எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருமதி சோனியாகாந்தி புகழாரம்!

புதுடில்லி, ஆக. 10- -கலைஞரின் மறைவு, எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. அவர் எனக்கு தந்தையை போல் இருந்தார் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டா லின் அவர்களுக்கு எழுதிய கடி தத்தில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி அவர்கள் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, சோனியா காந்தி அவர்கள் அனுப்பியுள்ள இரங்கல் கடி தத்தில் கூறியிருப்பதாவது:-

அரசியல் உலகத்திலும், பொது சேவையிலும் உன்னத மான தலைவராக கலைஞர் இருந்தார். அவரது மறைவு, எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு. அவர் எப் போதும், என்னிடம் மிகுந்த அன்பையும், பரிவையும் காட் டியவர். அதை என்னால் மறக்க முடியாது. அவர் எனக்கு தந்தையை போன்றும் இருந் தார். கலைஞர் போன்ற நபரை நாம் மீண்டும் பார்க்க முடியாது. அந்த அரசியல் மேதை, அவரது அர்ப்பணிப்பு ஆகி யவை இல்லாதது இந்த நாட் டுக்கும், மக்களுக்கும் பெரிய இழப்பு.

தமிழர் பண்பாட்டைஉலக அளவில் அங்கீகாரம் கிடைக்கச் செய்தவர்!

கலைஞர் அவர்கள் மிகச் சிறந்த இலக்கியவாதி. தமிழ கத்தை வளமாக்கியதிலும், பண்பாட்டுமற்றும் கலையை வளர்த்து உலகளவிலான அங் கீகாரம் கிடைக்கச் செய்ததிலும் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.கலைஞர் அவர்கள் தனது நீண்ட சிறப்பான வாழ்க்கை யில், சமூகநீதிக்காகவும், சமத் துவத்துக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், பிற்படுத்தப் பட்ட ஒவ்வொருவரின் நலனுக் காகவும் பாடுபட்டார்.

கலைஞர் அவர்கள் முழுமையான, மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்ந்தார். தற் போது துன்பங்களில் இருந்து விடுபட்டுள்ளார். அவர் உடல் நிலை குன்றிய சமயத்தில் நீங் கள் முழு ஈடுபாட்டுடன் கவ னித்துக் கொண்டது பாராட்டத் தக்கது. இவ்வாறு சோனியா காந்தி அவர்கள் கூறியுள்ளார். மேலும் தனது கடிதத்தில் சோனியா காந்தி அவர்கள் கூறுகையில், தமிழக அரசிலும், அரசியலிலும் கலைஞரின் நீண்ட காலபணி, மிகச் சிறந்த மற்றும் சகிப்பு தன்மையுடன் கூடிய பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளது. அதற்காக அவர் எப்போதும் போற்றப்படுவார், நினைவு கூரப்படுவார். நீங்கள் (மு.க.ஸ்டாலின்) தனது பாரம் பரியத்தை மேலும் பேணிக் காத்து, முன்னெடுத்து செல்வீர் கள் என கலைஞர் நம்பினார். அதையே நானும் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner