எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரகுராம் ராஜனிடம் மன்றாடும் பாஜக தலைவர்கள்!

புதுடில்லி, ஆக. 10 2014-இல் ஆட்சிக்கு வந்த மோடிஅரசு, ஆரம் பம் முதலே அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜ னுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்க மறுத்தும், இது பயனளிக்காது; இந்திய பொருளாதாரத்தை பின்னோக்கி கொண்டுசென்று விடும்என்றும் ரகுராம் ராஜன் எச்சரித்தபோது, மோடி அரசு அதை காதில்வாங்கிக் கொள்ளவில்லை. வராக்கடன்அதிகரிப்பு குறித்த நடவடிக்கைகளிலும் ரகுராம் ராஜனுக்கு எதிராக மோடி அரசுநடந்து கொண்டது. எப்படியாவது ரகுராம் ராஜனை பதவி யிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று மோடி அரசு துடித்தது.

எதிர்பார்த்ததைப் போலவே ரகுராம் ராஜனும் ஒருகட் டத்திற்குப் பிறகு, அவராகவே பதவி விலகினார். மிகவும் மகிழ்ச்சியடைந்த மோடி அரசு உடனடியாக தங்களுக்கு நெருக்க மான உர்ஜித் படேலை ரிசர்வ் வங்கி ஆளுநராக்கி, அடுத்த சில நாள்களிலேயே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது. இவ்வாறு ரகுராம் ராஜன் பதவி விலகி 2 ஆண்டுகளாகி விட்ட நிலையில், அவருக்கு பாஜக மூத்த தலைவரான முரளிமனோகர் ஜோஷி, திடீர் கடிதம் ஒன்றை தற்போது எழுதியுள்ளார். வங்கி வராக் கடன்களை கட்டுக்குள் கொண்டுவர முரளிமனோகர் ஜோஷி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த குழுவின் சார்பாக இந்தக் கடிதத்தை எழுதியுள்ள ஜோஷி, வராக்கடன் பிரச்சி னையில் அரசுக்கு உதவுமாறு ரகுராம் ராஜனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய வங்கிகளின் வராக்கடன்கள் மிகவும் அதிகரித்து விட்டன. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு எனது தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. நீங்கள் பொருளாதாரத்துறையில் ஒரு நிபுணர் என்பதை நாங்கள் அறிவோம். அத்துடன் வராக்கடன்கள் குறித்து தங்க ளுக்கு நல்ல அனுபவம் உள்ளது. தற்போதுள்ள வங்கிகளின் வராக்கடன் நிலையை உங்களால் புரிந்து கொள்ள முடியும். எனவே, அதைக் கட்டுக்குள் கொண்டுவர, பொருளாதார நிபுணர் எனும் முறையில் தாங்கள் அறிவுரைகளை அளிக்க வேண்டும் என்று ஜோஷி கேட்டுள்ளார். அதாவது, தங்களால் விரட்டியடிக்கப்பட்ட ஒரு நபரிடம், வெட்கமே இல்லாமல் பாஜக தலைவர்கள் உதவி கேட்டுள்ளனர்.

அரசியலுக்குள் குற்றவாளிகள் நுழையக்கூடாது : உச்சநீதிமன்றம் கண்டிப்பு

புதுடில்லி, ஆக.10 குற்றவாளிகள் அரசியலுக்குள் நுழையக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களில் 34 சதவீதம் பேர்மீது குற்றப்பின்னணி இருப்பதாக கூறி என்ஜிஓ சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கை மூத்த வழக்குரைஞர் தினேஷ் திவேதி தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி 2016 மார்ச் 8 இல் உத்தரவிட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் நாரிமன், கன்வில்கர், சந்திராசூட், இந்து மல்கோத்ரா அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நாடு முழுவதும் உள்ள எம்பி. எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை தாமதமின்றி தினந்தோறும் கீழ்நீதிமன்றங்கள் ஒருவருடத்திற்குள் விசாரித்து முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத னால் வழக்கு  விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி அடைந்தது. இதையடுத்து ஒரு வருடத்தில் ஏன் வழக்குகளை முடிக்க முடியவில்லை என்பதற்கான விளக்கத்தை அந்தந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் கீழ் நீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் கூறுகையில்,  மிகவும் மோசமான குற்றவழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தேர்த லில் நின்று வெற்றி பெற்று அரசியல் அமைப்பில் இடம் பெறக்கூடாது. நாங்கள் கூறும் எல்லைக்கோடு என்பது சட்டப் படி நடப்பதுதான். நாங்கள் புதிய சட்டத்தை உருவாக்க விரும்பவில்லை. அது நாடாளுமன்றத்தின் பொறுப்பு என்று கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner