எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.11  போராட்டங் களில் பொதுச்சொத்து சேதப் படுத்தப்படுவதை தடுக்க அரசு சட்டம் கொண்டு வரும் வரை யில், எங்களால் காத்திருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு அமைப் புகள் சார்ந்த போராட்டங்களின் போது அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகின்றன.

இதுதொடர்பாக கொடுங்கல்லூர் பிலிம் சொசைட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம் கான்வில்கர், சந் திரசூட் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கே.கே.வேணு கோபால்,  நாடு முழுவதும் ஒவ் வொரு வாரமும் ஏதாவது ஒரு இடத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றபடி உள்ளன.

சமீபத்தில் கூட எஸ்சி, எஸ்டி பிரச்சினை, மராத்தா பிரச்சினை ஆகியவற்றால் பொதுச்சொத் துக் கள் சேதம் அடைந்தன. பத்மாவதி திரைப்படம் வெளியான சமயத் தில் கூட ஒரு குழுவினர் பகிரங் கமாக அதில் நடித்த நடிகையின் மூக்கை அறுப்போம் என்று மிரட்டினர். ஆனால், இவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள்,  அப்படியானால் இந்த விவகாரத் தில் உங்கள் கருத்துதான் என்ன? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கே.கே. வேணுகோபால், வன்முறை, கல வரம், பொதுச்சொத்து சேதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அந்த பகுதியில் உள்ள குறிப் பிட்ட அதிகாரியை பொறுப்பேற்க செய்ய வேண்டும்.

இது தொடர் பாக மத்திய அரசு புதிய சட்டத் திருத்தம் கொண்டு வர உள்ளது. இதற்கு ஏற்ற வகையில் நீதிமன்ற மும் சட்ட விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்றார். அதற்கு நீதிபதிகள், உங்கள் புதிய மசேதா வரும் வரை எங்களால் காத்திருக்க முடியாது. ஏனெனில், இது மிகவும் மோச மான, ஆபத்தான சூழ்நிலையை காட்டுகிறது. கலவரம், வன் முறை, அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளை விப்பது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு இந்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறி, தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner