எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சட்டத் திருத்த மசோதா அறிமுகம்

புதுடில்லி, ஆக.13 விவாகரத்து கோருவதற்கான சட்டபூர்வ காரணங்களிலிருந்து தொழுநோயை நீக்குவதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் வெள் ளிக்கிழமை அறிமுகப்படுத் தப்பட்டது.

தொழுநோயால் பாதிக்கப் பட்டிருக்கும் வாழ்க்கை துணையுடன், திருமண உறவை தொடர விரும்பா விட்டால், அதற்குரிய மருத் துவ சான்றிதழ்களுடன் விவா கரத்து கோரி விண்ணப்பிப் பதற்கு தற்போதுள்ள சட்டப் பிரிவுகளில் இடமுள்ளன. அதனை மாற்றுவதற்கு வகை செய்யும் தனிநபர் சட்டத் திருத்த மசோதா-2018' மக்கள வையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

கிறிஸ்தவ விவகாரத்து சட்டம், முஸ்லிம் திருமண சட்டம், இந்து திருமண சட்டம், சிறப்பு திருமண சட்டம், இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் ஆகிய 5 சட்டங்களில் திருத்தம் செய்யக் கோரும் அந்த மசோதாவை, சட்டத் துறை இணையமைச்சர் பி.பி.சவுதரி அறிமுகம் செய்தார். மசோதா வில் கூறப்பட்டுள்ளதாவது:

தொழுநோயை குணப் படுத்த முடியாது என்ற எண் ணம் நிலவிய காலகட்டத்தில், அவர்கள் தனிமைபடுத்தப்பட் டனர்; சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டனர். ஆனால், மருத்துவத் துறையின் வளர்ச்சியால், தொழுநோயை குணப்படுத்துவதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டு, அந்நோயாளிகள் மீதான மக்களின் அணுகுமுறை மாறி வருகிறது. இதுபோன்ற சூழலில், தொழுநோயாளிகளுக்கு பாகு பாடு காட்டும் வகையில் உள்ள சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம், மாநிலங் களவை மனுக்கள் குழு, சட்ட ஆணையம் ஆகியவை பரிந் துரைத்தன. அத்துடன், உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளையும் மனதில் கொண்டு, இந்த சட்ட திருத்த மசோதா உருவாக்கப் பட்டுள்ளது. தொழுநோயாளி களிடம் காட்டப்படும் பாகு பாட்டை ஒழிக்கவும், சமூக நடைமுறையில் அவர்களை இணைக்கவும் இந்த மசோதா உதவும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

முன்னதாக, தொழு நோயாளிகளுக்கு பாகுபாடு காட்டும் வகையிலான சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் அண்மையில் பரிந்துரைத்திருந்தது. மேலும், தொழு நோயாளிகள் மீதான பாகுபாடு ஒழிக்கப்பட வேண் டும் என்ற அய்.நா.வின் தீர் மானத்தில் இந்தியா கையெ ழுத்திட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner