புதுடில்லி, ஆக. 13- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகங்களில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் தீர்ப்பாயமாக, இந்தியா செயல்படும் வகையி லான சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேறியது. விவாதத்தின் போது பேசிய, பா.ஜ.க.,வை சேர்ந்த, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிர சாத், ''இந்த மசோதா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது,'' என்றார்.
மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட, திவால் சட்டத் திருத்த மசோதா மாநி லங்களவையில் நேற்று குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறை வேற்றப்பட்டது. இதன் படி, கட்டுமான நிறுவனங்களிடம் வீடு வாங்குவோர், வெறும் வாடிக்கையாளராக மட்டும் இல்லாமல், நிதியாளர்களாக வும் கருதப்படுவர்.