எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராம்தேவ் மோசடி அம்பலம்

புதுடில்லி, ஆக.16- யோகா, ஆயுர்வேதம் உள் ளிட்ட விஷயங்களை காசாக்கி, நாட்டின் பெருமுதலாளிகளில் ஒருவராக மாறியிருப்பவர் ராம்தேவ். இவரது பதஞ்சலி நிறுவனம் பல ஆயிரம் கோடி மதிப்பு சொத்து கொண்ட நிறு வனமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், ராம்தேவ், கட் டுக்கடங்காத தனது வரு வாய்க்கு கணக்கு காட்டுவ தற்காகவே பல் வேறு போலி நிறுவனங்களை நடத்தி வந்தி ருப்பதும் தெரியவந் துள்ளது.பதஞ்சலி நிறுவனத்தின் கீழ் 21 தனியார் நிறுவனங்களும், 26 கூட்டாண்மை தொழில் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் டில்லி யில் இருக்கும்வெர்வே கார்ப் பரேசனும் ஒன்றாகும். இந்த நிறுவனம் தொடங்கப் பட்ட சில ஆண்டுகளில் ரூ. 325 கோடி வரை முதலீடு செய்யப் பட்டுள்ளது.

ஆனால், அதன்பிறகு எந்த வணிக செயல்பாடும் இந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப் படவில்லை. டெபாசிட் மூலமான வட்டியை மட்டுமே வருவாயாக ஈட்டி வருகிறது என்றும் தகவல்கள் வெளி யாகியுள்ளன. சொல்லப் போனால், இந்த நிறுவனத்தின் முகவரியாககூறப்பட்டுள்ள இடத்தில் பெயர்ப் பலகை கூட வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது செய் திகள் வெளியாகியுள்ள நிலை யில், கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணத்தை பதுக்கி வைப்பதற்காக வெர்வே கார்ப்பரேன் போன்ற போலி நிறுவனங்களை உருவாக்கி ராம்தேவ் மோசடி செய்திருப் பதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner