எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.19  ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தி, தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் சிம் கார்டு வாங்கும்போது, முகத்தை படம் பிடித்து அடை யாளம் காணும் திட்டம் அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தற்சமயம், ஆதார் விவரங் களை சரி பார்க்க விரல் ரேகை பதிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ரேகை பதிவை குளோனிங் முறையில் எடுத்து ஏமாற்று வேலை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந் துள்ளது.

இதையடுத்து, ஆதார் அட்டை எடுக்கும்போது பதியப் பட்ட (இகேஒய்சி) முகத்தையும், சிம் வாங்க வருபவரின் முகத்தையும் பொருத்திப் பார்த்து அடை யாளம் காணும் திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. அய்தராபாதில் கடந்த ஜூன் மாதம், சிம் கார்டு விநியோகஸ்தகர் ஒருவர், வாடிக்கையாளர்களின் விரல் ரேகைகளை போலியாகப் பயன் படுத்தி ஆயிரக்கணக்கான சிம் கார்டுகளை செயல் படுத்திய (ஆக்டிவேஷன்) விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலை யில், புதிய சிம் கார்டுகளை வழங்கு வதற்கும், செயல் படுத்துவதற்கும் (ஆக்டிவேஷன்) ஆதார் முகப்பதிவு அடை யாளம் என்பது கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இருக்கும் எனக் கருதப் படுகிறது. அதேவேளையில், ஆதார் தவிர்த்த பிற அடை யாள அட்டைகள் மூலமாக சிம் வாங்குபவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என இந்திய தனித்துவ அடையாள (யுஅய்டிஏஅய்) ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner