எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக. 19 ஜிஎஸ்டி வரி விதிப்பானது, சிறு, குறுமற்றும் நடுத்தர நிறு வனங்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கி இருப் பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக் கையை விட,சரக்கு மற்றும் சேவை வரியால்தான் (ஜிஎஸ்டி) சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அது கூறி யுள்ளது.கடந்த 2 ஆண்டுகளாக, மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அம லாக்க நடவடிக்கைகள், பல் வேறு வகைகளில் தொழிற் துறையினரை பாதித்துள்ளது. பண மதிப்பு நீக்கத்திற்கு முன்பாகவே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடனுதவிகள் குறைந்து வந்த நிலையில், பண மதிப்பு நீக் கம் கடனுதவிகளை இல்லா மல் செய்தது. ஜிஎஸ்டிஅமலான பிறகு அதனால் இன்னும் மோசமாகி,தொழில் நடத்தவே முடியாத சூழலுக்கு பலரைத் தள்ளியது.ஜிஎஸ்டி மூலம், சிறு நிறுவனங்களுக்கு கட னுதவி கிடைக்கும் என்று மத்தியஅரசு உறுதியளித்ததும் நடக்கவில்லை. மாறாக, அது எதிர்மறை விளைவுகளே அரங்கேறின. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக் கான கடனுதவி 8.5 சதவிகிதம் என்ற அளவிலேயே அதிகரித் தது. இது 2015ஆம் ஆண்டின் அளவை விட மிகவும் குறை வாகும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை யில், நகை - ரத்தினங்கள், ஜவுளி, கார்பெட், தோல், கை வினைப் பொருட்கள் போன்ற வற்றின் ஏற்றுமதிப் பிரிவில் அதிகளவில் வேலைவாய்ப்பு கள் உருவாக்கப்படுகின்றன. இத்துறை ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளையே பெரு மளவில் சார்ந்திருக்கின்றன. ஆனால், ஜிஎஸ்டி வரி விதிப்பு இத்துறையை மோச மாக பாதித்துள்ளது. இது தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) பல்வேறு தாக்கங்களால், சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட் டுள்ளது. இந்த பாதிப்பு, பணமதிப்பு நீக்கஅறிவிப்பு வெளியான பிறகு ஏற் பட்ட பாதிப்பை விட அதிகமாகும். குறிப்பாக, ஜிஎஸ்டி ரீபண்ட் கிடைப்பதில் உள்ள சிக்கல், உள்ளீட்டு வரிக் கடன்கள் போன்றவை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையைப் பெரிதும் பாதித் துள்ளன. எனவே, இந்த நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மூலதனத்தைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றன என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner